Tamilnadu

News June 1, 2024

காட்டுப் பன்றி இறைச்சி பதுக்கியவர் கைது

image

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி சின்னாளபட்டி அருகே உள்ள சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (28). இவர் தனது வீட்டில் காட்டுப் பன்றி இறைச்சி பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் அங்கு சென்ற வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  அங்கு பன்றி இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஸ்டீபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 1, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு 

image

அரியலூர் மாவட்டம் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கும் என்னும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கான எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து இன்று (1.6.2024) சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

News June 1, 2024

தி.மலை மாமண்டூர் குகைக்கோயில் சிறப்புகள்!

image

திருவண்ணாமலையில் உள்ள மாமண்டூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது குகைக்கோயில். இக்குகைகள் இயற்கையாக அமைந்த குன்றினை இணைத்து ஏற்படுத்தப்பட்ட பெரிய ஏரியின் கரைகளின் மீது அமைந்துள்ளன. தேசிய சின்னமான இதில் காணப்படும் கல்வெட்டுகளில், ஏழாம் நூற்றாண்டின் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டதாக காணப்படுகிறது.

News June 1, 2024

மார்ஷல் நேசமணி நினைவு நாள் அனுசரிப்பு

image

கன்னியாகுமரி: தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணியின் 56-வது நினைவு தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News June 1, 2024

திண்டுக்கல் குணா குகை சிறப்புகள்!

image

கொடைக்கானல் பகுதியில் அமைந்துள்ள குணா குகை, முன்னதாக ‘டெவில்ஸ் கிச்சன்’ என்று அழைக்கப்பட்டது. 1992ஆம் ஆண்டு வெளியான குணா திரைப்படத்திற்கு பின்னரே குணாகுகை என்றானது. மோயர் பாயிண்ட் சாலையில் அமைந்துள்ள இந்த குகை தேவதாரு காடுகளின் வழியாக நடந்து செல்ல வேண்டும். ஆனால் பாதுகாப்புக்காரணங்களுக்காக அந்த குகை, தடைசெய்யப்பட்டுள்ளது. புராணக்கதைகளிலும் இந்த குகை பற்றி குறிப்புகள் உள்ளதாக நம்பப்படுகிறது.

News June 1, 2024

கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்து

image

குடியாத்தம் அசோக் நகர் பகுதியில் வேலூரைச் சேர்ந்த பாண்டிதுரைக்கு சொந்தமான ஆட்டோவில் கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார். இதுகுறித்து தீயணைப்பு துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிலிண்டரை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

News June 1, 2024

காஞ்சிபுரம்: 1433-ம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1433 ஆம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் நடத்திடவும், கிராமக் கணக்குகளை தணிக்கை செய்திடவும், வருவாய் தீர்வாய அலுவலர்களை நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் முன்னதாகவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News June 1, 2024

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி ஒத்திவைப்பு

image

உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் 29ஆம் தேதி மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா தலைமையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பயிற்சி நடைப்பெற்றது. இந்த நிலையில் புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியானது சில நிர்வாக காரணங்களால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலக படித்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

கிளாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க திட்டம்

image

கிளாம்பாக்கத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய தீர்வை எட்டும் வகையில் மேம்பாலம் கட்ட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு எதிரே ஜிஎஸ்டி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 6 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

சென்னை மெட்ரோ ரயில் மே மாத பயணம்

image

கடந்த மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தவர்கள் விவரம் குறித்து மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 01.01.24 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84, 63,384 பேர் பயணம் செய்துள்ளனர். இதில், கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 36,97,773 பேர் பயணம் செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!