India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலையில் மக்களவைத் தொகுதியில்
ஜோலார்பேட்டை தொகுதி
மின்னணு வாக்கு சுற்று -4
திமுக – 3705
அதிமுக – 2294
நாதக – 829
பிஜேபி – 1421
திமுக முன்னிலையில் உள்ளது
நீலகிரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளில் ஏழு சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளன. அதன்படி, திமுக 70,271 வாக்குகளுடன் வெற்றி முகத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பாஜக 41,418, அதிமுக 29,990, நாம் தமிழர் 5,802 வாக்குகள் பெற்றுள்ளன.
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் 7644 வாக்குகள் பெற்று முன்னிலை. காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 20868 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 13224 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், பாஜக வேட்பாளர் நரசிம்மன் 9524 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும், நாதக வேட்பாளர் வித்யா ராணி வீரப்பன் 3503 வாக்குகள் பெற்று நான்காம் இடத்திலும் உள்ளனர்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஜமால் முகமது கல்லூரியில் இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் மதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதல் சுற்று முடிவில் NOTA வுக்கு 583 வாக்குகள் பதிவாகி உள்ளது.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி முதல் சுற்றில் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 19,493 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 19,680 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 9022 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 4379 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் முதல் சுற்றில் முடிவில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலையில் உள்ளார்.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-95658, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-33353, பாமக வேட்பாளர் திலகபாமா -14739, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-13435 வாக்குகள் பெற்றுள்ளனர். 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை வகிக்கிறார்.
தென்காசி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தனியார் கல்லூரியில் தீவிரமாக எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை தபால் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குச்சாவடி முகவர்களிடம் காட்டாமல் அதிகாரிகள் வாக்குகளை பெட்டியில் போட்டதால் முகவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆய்க்குடி தனியார் கல்லூரியில் தீவிரமாக எண்ணப்பட்டு வருகிறது. அங்கு பணிபுரியும் தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் அந்த பகுதியில் உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது. அதனை தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நாகசுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போட்டியிட்டனர். இந்த நிலையில் வேட்பாளர் கனிமொழி 1,39.770 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதனால் திமுக நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரக்கூடிய நிலையில் 2 சுற்றுகள் முடிவில்
இ.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளர் சுப்பராயன் 45946 வாக்குகள் பெற்றுள்ளார். அதற்கு அடுத்தபடியாக
அதிமுக 37076, பாஜக 15213, நாம் தமிழர் 6069 பெற்றுள்ளனர். இந்திய கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் 9,869 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.