India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மக்களவை தொகுதியில் 3ஆம் சுற்று முடிவு வெளியாகியுள்ளது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 60,839 வாக்குகள் பெற்று 25,532 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சேகர் தாஸ் 34,307 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் தேவநாதன் 23,433 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 21,544 வாக்குகள் பெற்றுள்ளார்.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 6வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-192552, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-64063, பாமக வேட்பாளர் திலகபாமா -30171, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-26451 வாக்குகள் பெற்றுள்ளனர். 1 லட்சத்து 30 ஆயிரம் வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை வகிக்கிறார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி 4 வது சுற்று முடிவுகள் சற்று முன் அறிவிக்கப்பட்டன. இதன்படி காங்கிரஸ் – 91708, பாஜக – 63706, அதிமுக – 17206 நாதக – 17768 ஓட்டுகள் பெற்றுள்ளன.
வாக்கு வித்தியாசம்- 28002 ( காங்கிரஸ் முன்னிலை) தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலை வகிக்கிறார். இதனால் இவரது வெற்றி மெல்ல மெல்ல உறுதியாகி வருகிறது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை நடைபெற்ற நான்கு சுற்று முடிவில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட நவாஸ் கனி 44,715 வாக்குகளும் பாஜக ஆதரவில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 24,782 வாக்குகளும் பெற்றுள்ளனர் தொடர்ந்து நவாஸ்கனிக்கு ஏறு முகமாக இருப்பதால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் இரண்டாம் சுற்று முடிவில், விசிக: 68,239, அதிமுக 58,285, : பாமக 27,032, நாம் தமிழர்: 8,481, விசிக வேட்பாளர் ரவிக்குமார் 9,954 வாக்குகள் முன்னிலையில் உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் 100வது நிகழ்ச்சியாக திருச்சி, திருவெறும்பூா் அருகே காட்டூா் ஆயில் மில் பகுதியில் கருணாநிதியின் உருவச் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார். நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் இரண்டாம் சுற்று முடிவில் விசிக – 45,880, அதிமுக – 41,392, , நாம் தமிழர் 5871 வாக்குகள் பெற்றுள்ளனர். விசிக வேட்பாளர் ரவிக்குமார் 4,498 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை கல்லூரியில் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் முதல் சுற்று முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 27235 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் A.L.விஜயனை விட 15000 வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
நெல்லை மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றன. இதில் அம்பை சட்டமன்ற தொகுதியில் ஆறாவது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் 3563 வாக்குகள், அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் ஜான்சி ராணி 536 வாக்குகளும், பாரதிய ஜனதாவை சேர்ந்த வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 1790 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சத்யா 670 வாக்குகளும் பெற்றுள்ளன.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் நான்காம் சுற்றும் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து காங்கிரஸ் 96639 வாக்குகளும், அதிமுக 49719 வாக்குகளும், பா.ம.க 38219 வாக்குகளும், நா.த.க 23795 வாக்குகளும் பெற்றுள்ளன. மொத்தமாக 46920 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை வகித்து வருகிறார்.
Sorry, no posts matched your criteria.