Tamilnadu

News June 4, 2024

விருதுநகரில் 5ஆவது சுற்று வெளியீடு

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 5வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 19821 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 16326 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 6738 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3367 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 5வது சுற்றின் முடிவில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 5119 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

கடலூர்: 6ஆம் சுற்று முடிவுகள்

image

கடலூர் நாடாளுமன்ற தேர்தல் 6 சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலையில் உள்ளார்.

காங்கிரஸ் -153254,தேமுதிக -96459,பாமக -63261,நாதக -18376 வாக்குகள் பெற்றுள்ளனர். விஷ்ணு பிரசாத் 56795 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலையில் உள்ளார்

News June 4, 2024

தென்காசி வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிர்வாகிகள்

image

தென்காசி மாவட்டம் கடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது ஆய்க்குடி தனியார் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகிறது. இதில் இன்று மதியம் நிலவரப்படி தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலையில் இருக்கிறார். அவருக்கு குற்றாலம் நிர்வாகிகள் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்.

News June 4, 2024

தொடர் பின்னடைவு: பாஜக வேட்பாளர் வெளியேறினார்

image

நெல்லை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியானது நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து இன்று காலை முதலே தீவிரமாக எண்ணப்பட்டு வருகிறது. இதில் காலையில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலையில் இருக்கிறார். இதனால் பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரன் மனவருத்தத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து தற்போது வெளியேறினார்.

News June 4, 2024

திண்டுக்கல்: ஏழாவது சுற்றில் முன்னிலை

image

திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 7வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-220072, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-73583, பாமக வேட்பாளர் திலகபாமா -35494, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-30378 வாக்குகள் பெற்றுள்ளனர். 1,30000 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை வகிக்கிறார்.

News June 4, 2024

தூத்துக்குடியில் தொடர்ந்து கனிமொழி முன்னிலை

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில் திமுக இந்தியா கூட்டணி வேட்பாளர் கனிமொழி 1,81,132 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News June 4, 2024

தென்காசியில் 5வது சுற்றில் திமுக முன்னிலை

image

தென்காசி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆய்க்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது.இதில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 5வது சுற்றின் முடிவு தொடர்ந்து திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை பெற்று வருகிறார். 50350 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.திமுக – 104540,அதிமுக -54190, பாஜக-49875, நாம் தமிழர்- 30716 வாக்குகள் பெற்றுள்ளது.

News June 4, 2024

மயிலாடுதுறை ஆறாவது சுற்றிலும் காங்கிரஸ் முன்னிலை

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் ஆறாவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை வகித்து வருகிறார். அதன்படி, காங்கிரஸ் 1,47,386 வாக்குகளும், அதிமுக 72579 வாக்குகளும், பா.ம.க 53735 வாக்குகளும், நா.த.க 35614 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தமாக 74,807 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.

News June 4, 2024

தென்காசியில் 12.15மணி நிலவரம்!

image

தென்காசி பாராளுமன்ற தொகுதி 12.15மணி நிலவரப்படி, தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் ஆகிய ஆறு தொகுதிகளில் என்னப்பட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை 5வது சுற்றின் முடிவு
தொடர்ந்து திமுக முன்னிலை தொடர்ந்து வருகிறது. வாக்கு வித்தியாசம்-50350, திமுக -104540,அதிமுக-54190, பாஜக – 49875, நாம் தமிழர்-30716 வாக்குகள் பெற்றுள்ளது.

News June 4, 2024

5 ஆம் சுற்று 17,285 வாக்குகள் முன்னிலை

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 5 ஆம் சுற்று முடிவில் விசிக – 1,12,480, அதிமுக – 95,195, பாமக – 44,742, நாம் தமிழர் – 14,846 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 17,258 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

error: Content is protected !!