India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் இரண்டாம் சுற்று முடிவில் விசிக – 45,880, அதிமுக – 41,392, , நாம் தமிழர் 5871 வாக்குகள் பெற்றுள்ளனர். விசிக வேட்பாளர் ரவிக்குமார் 4,498 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை கல்லூரியில் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் முதல் சுற்று முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 27235 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் A.L.விஜயனை விட 15000 வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
நெல்லை மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றன. இதில் அம்பை சட்டமன்ற தொகுதியில் ஆறாவது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் 3563 வாக்குகள், அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் ஜான்சி ராணி 536 வாக்குகளும், பாரதிய ஜனதாவை சேர்ந்த வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 1790 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சத்யா 670 வாக்குகளும் பெற்றுள்ளன.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் நான்காம் சுற்றும் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து காங்கிரஸ் 96639 வாக்குகளும், அதிமுக 49719 வாக்குகளும், பா.ம.க 38219 வாக்குகளும், நா.த.க 23795 வாக்குகளும் பெற்றுள்ளன. மொத்தமாக 46920 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை வகித்து வருகிறார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதி, மொத்த வாக்குகள் இன்று காலை 11.30 மணி நேர நிலவரபடி, திமுக கூட்டணி சார்பில் மதிமுக – துறை வைகோ – 98,62, அதிமுக – கருப்பையா – 45815, அமமுக – செந்தில்நாதன் – 17,459, நாதக – ராஜேஷ் – 21,280, 58,807 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு பாகம் எண் 4-ல் 1 வாக்கு மட்டுமே கிடைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகின்றது. இது முற்றிலும் பொய்யானது. கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பாகம் எண் 4-ல் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 101 வாக்குகள் பெற்றுள்ளார் என்பதுதான் உண்மை.
திருச்சி மக்களவை தொகுதியில் 11 மணி நிலவரப்படி மதிமுக வேட்பாளர் துரை வைகோ 74,475 வாக்குகள் பெற்று 38,705 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 35,770 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 13,052 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாதக ராஜேஷ் 17,083 வாக்குகள் பெற்றுள்ளார்.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில்,
2-வது சுற்று முடிவில்,
பொள்ளாச்சி – திமுக 7108- அதிமுக- 4757 பாஜக- 4554, கிணத்துக்கடவு-திமுக 8787, அதிமுக 5675, பாஜக 6491
மடத்துக்குளம்- திமுக 4122 , அதிமுக 2350, பாஜக 1272, தொண்டாமுத்தூர்-திமுக 8790, அதிமுக 7850, பாஜக 3831
வால்பாறை-திமுக 4610, அதிமுக 2566, பாஜக 1690, உடுமலை- திமுக 3855, அதிமுக 2306, பாஜக 1137 வாக்குகள் பதிவாகியுள்ளது
ஸ்ரீபெரும்பத்தூர் மக்களவை தொகுதியை உள்ளடக்கிய 3ஆம் சுற்று முடிவு வெளியாகியுள்ளது. இதில், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 82,246 வாக்குகள் பெற்று 50,247 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 31,999 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 17, 031 வாக்குள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். தமாகா வேட்பாளர் 17,830 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஈரோடு மாட்டத்தில் 2ஆம் சுற்று முடிவில் திமுக 35867 ஓடுகள் பெற்று முன்னிலையில் உள்ளது. அதிமுக 16,112 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடத்திலும், தமாகா 4,288 ஓட்டுகள் பெற்று மூன்றாம் இடத்திலும், நாதக 5431 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.
திமுக வேட்பாளர் கேஇ பிரகாஷ் 19755 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.