India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தனியார் கல்லூரியில் தீவிரமாக எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை தபால் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குச்சாவடி முகவர்களிடம் காட்டாமல் அதிகாரிகள் வாக்குகளை பெட்டியில் போட்டதால் முகவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆய்க்குடி தனியார் கல்லூரியில் தீவிரமாக எண்ணப்பட்டு வருகிறது. அங்கு பணிபுரியும் தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் அந்த பகுதியில் உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது. அதனை தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நாகசுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போட்டியிட்டனர். இந்த நிலையில் வேட்பாளர் கனிமொழி 1,39.770 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதனால் திமுக நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரக்கூடிய நிலையில் 2 சுற்றுகள் முடிவில்
இ.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளர் சுப்பராயன் 45946 வாக்குகள் பெற்றுள்ளார். அதற்கு அடுத்தபடியாக
அதிமுக 37076, பாஜக 15213, நாம் தமிழர் 6069 பெற்றுள்ளனர். இந்திய கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் 9,869 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் உட்பட ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2-ம் சுற்றில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 53245 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 35429 வாக்குகளும், பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 24753 வாக்குகள் பெற்ற நிலையில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 17816 திமுக முன்னிலை வைக்கிறது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் ஆலோசனையின் பெயரில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு மற்றும் காவலர்களுக்கு உணவு தயார் செய்யும் கூடத்தை தென்காசி உணவு பாதுகாப்பு உட்கோட்ட அலுவலர் நாக சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தலில் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் போட்டியிட்ட நவாஸ் கனி இதுவரை நடைபெற்ற மூன்று சுற்றில் 12,322 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இதனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியின் 3 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க கூட்டணி 81815, அ.தி.மு.க கூட்டணி 18978, பா.ஜ.க கூட்டணி 57411வாக்குகள் பெற்றுள்ளன. 3 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவின் படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 24404 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து மூன்று சுற்றுகள் திமுக முன்னிலையில் உள்ளது.
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் பணி அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்தல் முன்னணி நிலவரத்தை திமுக தலைமையிலான இந்திய கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி எம்பி, ஊடக மையத்தில் செய்தியாளர் அறையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேரலை முடிவுகளை பார்த்து மகிழ்ந்தார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் இன்று காலை 10.40 மணி நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் – 1,06,263 வாக்குகளும்,
தே.மு.தி.க வேட்பாளர் சிவக்கொழுந்து – 67,819 வாக்குகளும்,பா. ம. க வேட்பாளர் தங்கர் பச்சான் – 31,511 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகன் 13,582 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது
Sorry, no posts matched your criteria.