India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் வாயிலாக மாவட்டம் முழுவதும் உள்ள 527 பள்ளிகளில் 34,233 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் நவாஸ்கனியும், பாஜக கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வமும் களமிறங்கி கவனத்தை ஈர்த்தனர்.இதில் நவாஸ்கனி வெற்றியை தனதாக்கினார். நவாஸ் கனி இத்தொகுதியில் 2ஆவது முறையும், ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து பிரிந்து சந்திக்கும் முதல் தேர்தலாகும். மேலும் இவரின் முதல் மக்களவைத் தேர்தலும் இதுவே. இத்தொகுதியில் திமுக 3 முறையும், காங்கிரஸ் 6 முறையும், அதிமுக 4 முறையும் வென்றுள்ளது.
நட்சத்திர தொகுதியான நீலகிரியில் களம் கண்டு திமுக வேட்பாளர் ஆ. ராசா வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் இதுவரை திமுக 3 முறையும், காங்கிரஸ் 8 முறையும், அதிமுக மற்றும் பாஜக தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தனி தொகுதியான நீலகிரியில் பாஜக சார்பில் எல். முருகனும், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலு மகன் லோகேஷ் தமிழ்செல்வனும் ஆ. ராசாவை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவினர்.
தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணியில் ஜான்பாண்டியனும் களமிறங்கி கவனத்தை ஈர்த்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருவரும் தோல்வியைத் தழுவினர். இத்தொகுதியில் களம் கண்ட திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வெற்றியைக் கைப்பற்றினார். இத்தொகுதியில் இதுவரை திமுக 1 முறையும், காங்கிரஸ் 9 முறையும், அதிமுக 3 முறையும், சிபிஐ 2 முறையும், தமாக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட சவுமியா அன்புமணியும், அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோகனும் தோல்வியைத் தழுவினர். வெற்றியைக் குறிவைத்து சவுமியா அன்புமணியை களமிறக்கிய பாமகவின் வியூகம் பொய்த்து போனது. இந்த தொகுதியில் இதுவரை திமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், அதிமுக 2 முறையும், பாமக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
மதுரை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பி. சரவணனும், பாஜக சார்பில் ராம சீனிவாசனும் களம் கண்டு தோல்வியைத் தழுவினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கு அவர் அதிக வாக்குகளுடன் வெற்றியைக் கைப்பற்றியுள்ளார். இத்தொகுதியில் இதுவரை சிபிஎம் 3 முறையும், காங்கிரஸ் 4 முறையும், அதிமுக, திமுக, பாஜக மற்றும் தமாக தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
நட்சத்திர தொகுதியான கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக-வின் சிங்கை ராமச்சந்திரனும், பாஜக-வின் அண்ணாமலையும் தோல்வி அடைந்தனர். கோவையில் 28 ஆண்டுகளுக்குப் பின் திமுக நேரடியாக களம் கண்டு வெற்றிப் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் இதுவரை திமுக 1 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 1 முறையும், சிபிஐ 5 முறையும், சிபிஎம் 3 முறையும், பாஜக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
நட்சத்திர தொகுதியான கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் மூத்த அரசியல்வாதியான பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியைத் தழுவியுள்ளார். இத்தொகுதியில் இதுவரை திமுக 1 முறையும், காங்., 5 முறையும், பாஜக 2 முறையும், சிபிஎம் மற்றும் தமாக தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
சென்னையில் 3 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய 3 மண்டலங்களில் இன்று இரவு 9 மணி முதல் வியாழக்கிழமை இரவு 9 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். மேலும், அவசரத் தேவைகளுக்கு 044-45674567 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.