Tamilnadu

News June 6, 2024

கிருஷ்ணகிரி: வீரப்பன் மகள் மும்முடங்கு… அசத்தல்

image

வீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இருந்து விலகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அவர் நாதக சார்பில் கிருஷ்ணகிரியில் போட்டியிட்டார். கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட அவர் 1,07,083 வாக்குகள் பெற்றார். இது கடந்த தேர்தலை விட 3 மடங்கு அதிகம் என்பதால் நாம்தமிழர் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 6, 2024

வேலூர் மாவட்டத்தில் 140.80 மிமீ மழை பதிவு

image

கோடை காலத்து கடுமையான வெயிலை மழை வந்து தணித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூன் 5)  வேலூரில் அதிகபட்சமாக 40.10 மிமீ மழை பதிவானது. மோர்தனா 34.20 மிமீ மழையும், பேர்ணாம்பட்டு 2.60 மிமீ, கே.வி. குப்பம் 3 மிமீ, காட்பாடி 15.20 மிமீ மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 140.80 மிமீ மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News June 6, 2024

யார் இந்த சசிகாந்த் செந்தில்

image

கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், 2019இல் ராஜினாமா செய்துவிட்டு தமிழக காங்கிரஸில் இணைந்த அவர், தமிழக காங்கிரஸ் சமூகவலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்தார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்காக காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் அதன்பிறகு காங்கிரஸின் ‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவரானார். தற்போது திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளார்.

News June 6, 2024

திமுக வெற்றி வேட்பாளருக்கு வாழ்த்து

image

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி I.N.D.I.A கூட்டணியின், திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரை, வெற்றி பெற்றதை முன்னிட்டு, இன்று (06.06.2024) திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான மருத்துவர் எ. வ. வே. கம்பனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

News June 6, 2024

சாதனை படைத்த சசிகாந்த் செந்தில்

image

திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சசிகாந்த் செந்தில் 7,96,956 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதியை விட 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தான் தமிழக அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர். மேலும் சசிகாந்த் செந்திலை எதிர்த்து போட்டியிட்ட 13 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 6, 2024

மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணுவுக்கு விருது

image

சென்னை ‘லிங்கன் புக் ரெக்கார்ட்ஸ்’ அமைப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கணுவுக்கு ‘வலிமையான சமுதாயத்தை உருவாக்கிய நீண்ட வரலாறு கொண்ட அரசியல் தலைவர்’ என்ற விருதை வழங்கியது. 1924ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி பிறந்த நல்லக்கண்ணு, சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதில் இருந்து தற்போதுவரை தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் போராட்டங்களை முன் நின்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 6, 2024

தேனி: இன்று கனமழைக்கு வாய்ப்பு!

image

தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக இன்று தேனி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் மலைப்பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளை சூறாவளி காற்று 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது

News June 6, 2024

மனோன்மனியம் பல்கலைக்கழகம் செட் தேர்வு ஒத்தி வைப்பு!

image

கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கான செட் தகுதி தேர்வினை நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கான செட் தகுதி தேர்வு நாளை நடைபெற இருந்த நிலையில் தேர்வானது ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் சார்பில் இன்று(ஜூன் 6) அறிவிக்கப்பட்டுள்ளது .

News June 6, 2024

சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயி ஆர்வம்

image

காரைக்காலை அடுத்த அத்திப்படுகை கிராமத்தில் முதன்முறையாக சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயி பழனி வேல் என்பவர் தனது கால் ஏக்கர் நிலத்தில் ஈடுபட்டுள்ளார்.‌ இதற்காக அவர் டெல்லியில் இருந்து சின்ன வெங்காயம் விதைகளை வாங்கி விதைத்தார். இந்த சின்ன வெங்காயமானது விதைத்த 90 நாளில் இருந்து 100 நாளில் அறுவடை செய்யக்கூடிய பயிராகும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

News June 6, 2024

கனிமொழி-ராபர்ட் புரூஸ் சந்திப்பு

image

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிட்ட கனிமொழி ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில் இருவரும் நேற்று (ஜூன் 5) சந்தித்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வின் போது பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!