Tamilnadu

News June 6, 2024

திருச்சியில் மாஜி அமைச்சர் பேட்டி

image

திருச்சியில் இன்று அதிமுக மாஜி அமைச்சர் கு.ப கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், பாஜகவுடன் கூட்டணி வைத்த ஜெயலலிதா  இனி அவர்களுடன் கூட்டணி இல்லை, என்பதை தெளிவாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். கட்சியை வளர்த்தவர்களுக்கு தான் தோல்வியின் வலி தெரியும். எனக்கு வலிக்கிறது. மேலும், அதிமுக  பணக்காரர்களால் உருவான கட்சிஅல்ல, ஏழை எளியவர்களால் எழுச்சி பெற்ற இயக்கம் என்றார்.

News June 6, 2024

தென்காசி பல்கலைக்கழக தேர்வு தள்ளிவைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ளடக்கிய திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஜூன் 7 மற்றும் 8ம் தேதி நடைபெற இருந்த மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்) தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News June 6, 2024

TNPSC தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு

image

TNPSC தொகுதி 1-க்கான முதல்நிலைத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாகர்கோவிலில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படுகிறது. மாணவர்கள் வேலைவாய்ப்பு மையத்தில் ஜூன் 10ம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்யலாம். முதலில் வரும் 100 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

News June 6, 2024

நாகர்கோவில்: அங்கீகாரம் இல்லாத 57 பள்ளிகள்

image

நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கட்டுபாட்டின் கீழ் செயல்படும்
57 பள்ளிகள் ஆரம்ப அங்கீகாரம் இன்றி
செயல்படுகின்றது.
எனவே RTE 2009- சட்டத்தின்படி
எந்தவொரு பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக்கூடாது. மேலும் 2024-25 ஆம் கல்வியாண்டில் இப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர்
அறிவுறுத்தியுள்ளார்.

News June 6, 2024

தேர்வர்களுக்கு முக்கிய அறிவுரை

image

வரும் 09.06.2024 அன்று சுபமுகூர்த்த நேரம் என்பதால் அன்றைய தினம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடிமைப்பணிகள் தேர்வு IV–னை எழுதும் தேர்வர்கள் முன்பே தேர்வறைக்கு வருவதற்கான நேரத்தை திட்டமிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

News June 6, 2024

வாணியம்பாடி: குறைந்த வாடகைக்கு டிராக்டர்

image

வாணியம்பாடி தாலுகா  அம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் இன்று காலை 11 மணியளவில் விவசாய நிலத்திற்கு குறைந்த வாடகைக்கு டிராக்டரை பயன்பாட்டிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி. முருகேசன் துவக்கி வைத்தார். உடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு எழுத்தர் கோவிந்தராஜ் விவசாயிகள் கிருபாகரன் தண்டபாணி சபிதா வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News June 6, 2024

விழுப்புரம்: இருளர்களுக்கான வீடுகள் கட்டும் பணி

image

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமானடி ஊராட்சியில், பிரதம மந்திரி ஜன்மந்த் குடியிருப்பு திட்டத்தின்கீழ், இருளர்களுக்கான வீடுகள் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம் சென்றனர்.

News June 6, 2024

வேலூர்: கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயற்சி

image

குடியாத்தம் தாலுகா நங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி அரிகிருஷ்ணன் (43). இவர் நேற்று மாலை (ஜூன் 5) வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதைக்கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News June 6, 2024

திருப்பூர்: திருமூர்த்திமலையில் சிறப்பு பூஜை

image

உடுமலை அருகே திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியர் சன்னதியில் முருகனுக்கு உகந்த தினமான வைகாசி கார்த்திகையையொட்டி இன்று சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், நெய் என பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சுப்பிரமணியர் சந்தன காப்பு ராஜ அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

News June 6, 2024

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை

image

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடை வைத்துள்ள உரிமையாளர்களிடம் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் மாநகர ஆணையாளர் காந்தி ராஜ் கூறுகையில், தேவனாம்பட்டினம் கடற்கரை புதுப்பிக்கும் பணி தொடங்க உள்ளதால் அங்கு கடை வைத்துள்ள அனைவரும் அதே பகுதியில் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினார். 

error: Content is protected !!