Tamilnadu

News June 7, 2024

டிஎன்பிஎஸ்சி தேர்வு பணிகள் குறித்து கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியரக புதிய கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்
நடத்தப்படவுள்ள தொகுதி 4 (TNPSC GROUP IV) தேர்வு நடைபெறவுள்ளதையொட்டி
முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில்
இன்று (07.06.2024) நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 7, 2024

தென்காசி வாக்காளர்களுக்கு நன்றி 

image

தென்காசியில் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில்
யானை சின்னத்தில் போட்டியிட்ட மகேஷ்குமார் (எ) மகேஷ் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்காசி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு வாக்களித்து ஆதரவு தெரிவித்து வாக்காளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

திருச்சியில் சவுக்கு சங்கருக்கு ஜாமின்

image

சவுக்கு சங்கர் மீது முசிறி டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு ஜூன் 4ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது. அதேபோல், சிறப்பு உதவி ஆய்வாளர் லதா திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் மீது கொடுக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கின் விசாரணையில் நேற்று மாலை சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

News June 7, 2024

விவசாய சங்கத் தலைவரின் கேள்வி என்ன தெரியுமா?

image

காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்ட விவசாயிகள், தற்போது பெய்துவரும் கோடை மழை காரணமாக உழவுப் பணிகளை மேற்கொண்டு குறுவை சாகுபடி மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். ஆனால் ஆற்றுப் பாசனத்தை மட்டும் நம்பியுள்ள நாகை மாவட்டத்திற்கு காவிரி நீர் இந்த ஆண்டு சரிவர கிடைக்குமா? குறுவை சாகுபடி மேற்கொள்ளலாமா? என்ற கேள்வியை நாகை மாவட்ட கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவர் பாலையூர் எஸ் ஆர் தமிழ்செல்வம் எழுப்பி உள்ளார்.

News June 7, 2024

இலவச நவீன செயற்கை கால், கை வழங்கும் முகாம்

image

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பில்  இலவச நவீன செயற்கை கால், கை அளவீடு செய்யும் முகாமை கடந்த 9, 12 ஆகிய தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாம்களில் கலந்து கொண்டு அளவீடு செய்த பயனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கி பொருத்தும் சிறப்பு முகாம் வரும் 29ஆம் தேதி  காலை 8.30 மணியளவில் கல்லூரியில்  நடைபெறவுள்ளது. இதில் பயனாளிகள் தவறாது கலந்து கொண்டு வேண்டும் என்றனர்.

News June 7, 2024

வேலூர்: கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

image

வேலூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 10.06.2024 முதல் 01.07.2024 அன்று வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 1,78,500 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் கால்நடைகளுக்கு  கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்

News June 7, 2024

காஞ்சிபுரம்: மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (07.06.24) மாலை 4 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரத்தில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 7, 2024

குமரி: மழைக்கு வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (07.06.24) மாலை 4 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரியில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 7, 2024

சென்னை: மழைக்கு வாய்ப்பு

image

சென்னை மாவட்டத்தில் இன்று (07.06.24) மாலை 4 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 7, 2024

செங்கல்பட்டு : மழைக்கு வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (07.06.24) மாலை 4 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!