Tamilnadu

News June 7, 2024

காங்கிரஸ் வேட்பாளருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து

image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட புதுச்சேரி திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

News June 7, 2024

வேலைவாய்ப்பற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி பெற விரும்பும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். பயிற்சியினை பெற விரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 7, 2024

திருச்சியில் அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்

image

திருச்சி மெக்கானிக் ஷாப்பில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக,
நேற்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. உடனே அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிட்டபோது, பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 குழந்தைத் தொழிலாளர்கள் அங்கு ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை மீட்ட அதிகாரிகள் இதுகுறித்து திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 7, 2024

திருச்சி ஆட்சியர் தகவல்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடத்தை விதிமுறைகள் விளக்கிக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 10.06.2024 முதல் பிரதி திங்கட்கிழமை வழக்கம்போல் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். எனவே பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை நேரடியாக வந்து வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

திருச்சியில் கஞ்சா விற்ற ரவுடி மீது பாய்ந்த குண்டாஸ்

image

திருச்சியில் கடந்த 26.5.2024ம் தேதி பிராட்டியூரில் கஞ்சாவை இளைஞர்களுக்கு விற்பனை செய்த வழக்கில் ரவுடி முத்துராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் ரவுடி முத்துராமன் மீது கஞ்சா விற்பனை செய்ததாக 3 வழக்கும்,1 கொலை வழக்கும், 2 திருட்டு வழக்கு உட்பட 23 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி கமிஷனர் இன்று உத்தரவிட்டார்.

News June 7, 2024

திருச்சி மாற்றம் அமைப்பின் சார்பில் விழா

image

திருச்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாற்றம் அமைப்பின் சார்பில் இன்று திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பழ வகையிலான மரக்கன்றுகள் மற்றும் மக்கும் வகையிலான பைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மரம் வளர்ப்போம் புவிப் பந்தை பாதுகாப்போம் எனும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

News June 7, 2024

திருச்சியில் சிக்கிய 14 பேர்

image

திருச்சி மாநகரில் சமீபகாலமாக கொள்ளை, திருட்டு,வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவது தொடர்ச்சியாக இருந்து வந்தது.இந்நிலையில், இன்று பல்வேறு கொள்ளை,திருட்டு,வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய 14 பேரை ஒரே நாளில் திருச்சி ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளனர். இவர்களிடம் இருந்து நகை,பணம், செல்போன்கள், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் பல குற்றவாளிகள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 7, 2024

கடலூர் ஆட்சியர் தலைமையில் கூட்டம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், தலைமையில் இன்று மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர் மாவட்ட துணை ஆட்சியர்கள் கடலூர் மாவட்ட வங்கியாளர்கள் அதன் முகவர்கள் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் வங்கி சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் ஆட்சித் தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

News June 7, 2024

தா.பாண்டியனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் மறைந்த தா.பாண்டியனுக்கு உசிலம்பட்டி அருகே மணிமண்டபம் அமைக்க அவரது உறவினர் தடை கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இன்று வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம், ” சட்டத்திற்கு புறம்பாக கட்டுமானம் மேற்கொண்டால், மீண்டும் மனுதாரர் நீதிமன்றத்தை நாடலாம்” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

News June 7, 2024

நாகை: தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த மாற்று கட்சியினர்

image

நாகையில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அக்கட்சிகளில் இருந்து விலகி, விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். நாகை நாணயக்காரர் தெருவில் உள்ள SCS,GMP திருமண மண்டபத்தில் மாவட்டச் செயலாளர் சுகுமாறன் முன்னிலையில்
நடைபெற்ற நிகழ்வில், ஏராளமான இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலருக்கு சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், தவெக மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!