Tamilnadu

News June 8, 2024

மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் இருக்கும் நிலையில் பெரும்பான்மையான 35 கவுன்சிலர்கள் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்கள். அதில் மேயர் கணவர் யுவராஜ் வார்டில் அடிப்படை தேவைகளை செய்ய விடாமல் தடுப்பதாக மனுவில் தெரிவித்தனர்.

News June 8, 2024

திருவாரூர்: ஜூன் 10ஆம் தேதி குறைதீர் கூட்டம்!

image

திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் மக்கள் நேர்காணல் உள்ளிட்டவை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறை விளக்கிக் கொள்ளப்பட்டதால் வரும் 10 ஆம் தேதி முதல் திருவாரூரில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் நேர்காணல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

விக்கிரவாண்டி: ரயில்வே தளவாட பொருட்கள் திருடிய சிறுவர்கள் 

image

விக்கிரவாண்டி போலீசார் நேற்று(ஜூன் 7) டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில், 17 வயதுடைய 2 சிறுவர்கள் சாக்கு பையில் வி.சாத்தனுார் ரயில்வே கேட் பகுதியிலிருந்து ரயில்வே இரும்பு தளவாட பொருட்களை திருடி வந்தது தெரியவந்தது. பிடிப்பட்ட இருவரையும் திண்டிவனம் ரயில்வே போலீசாரிடம் விக்கிரவாண்டி போலீசார் ஒப்படைத்தனர்.

News June 8, 2024

நெல்லை பல்கலையில் விண்ணப்ப தேதி மீண்டும் நீட்டிப்பு

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் நேற்று (ஜூன் 7) விடுத்துள்ள செய்தி குறிப்பில், பல்கலைகழகத்தில் அனைத்து முதுகலை பாடப்பிரிவுகளிலும் சேர்ந்து பயில இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு 26 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

கிருஷ்ணகிரி: குரூப் 4 தேர்வில் 41,325 பேர் பங்கேற்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு நாளை(ஜூன் 9) நடைபெறுகிறது. மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் உள்ள 131 மையங்களில் 41,325 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு தொடர்பான பணிகளை கண்காணிக்க அனைத்து தாலுகாவிலும் துணை கலெக்டர் நிலையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் மின்வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News June 8, 2024

அரியலூர்: 10 கடைகளுக்கு அபராதம்

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வணிக நிறுவனங்களில் நகராட்சி ஆணையர் அசோக்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட 30 கிலோ அளவுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் 10 கடைகளுக்கும் சேர்த்து ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தினர்.

News June 8, 2024

நின்றிருந்த டிராக்டர் மீது ஆட்டோ மோதி விபத்து

image

அரக்கோணம் அருகே டிராக்டர் ஒன்று நேற்றிரவு பழுதாகி நின்று கொண்டிருந்தது. காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த ஷேர் ஆட்டோ இருட்டில் தடுமாறி டிராக்டர் மீது மோதியது . இதில் ஆட்டோ டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் ஆட்டோ டிரைவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 8, 2024

பைக் ஓட்டிய சிறுவன் விபத்தில் சிக்கி பலி

image

தொண்டியை சேர்ந்தவர்கள் முகமது இசாம்(15). அவரது நண்பர் 15வயது சிறுவன். இருவரும் இசிஆர் சாலையில் தொண்டியிலிருந்து பி.வி.பட்டினத்தை நோக்கி நேற்று டூவீலரில் சென்றனர். காந்திநகர் அருகே சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதியதில் முகமது இசாம் அதே இடத்தில் பலியானார். பலத்த காயமடைந்த மற்றொரு சிறுவன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News June 8, 2024

ஏற்காட்டில் தொடர் பனிமூட்டம்

image

ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இன்று(ஜூன்.8) காலையிலும் வானம் இருள் சூழ்ந்து, பனி மூட்டமும் அதிகளவு இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். தொடர் சாரல் மழையால் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

News June 8, 2024

ஈரோடு: ஜூன் 10ல் குறைதீர் முகாம்

image

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் அறிவிப்பு மார்ச் 16ஆம் தேதி வெளியானது. எனவே ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், வாரம் தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டதால் , வரும் 10ஆம் தேதி முதல், மக்கள் குறைதீர் நாள் முகாம் வழக்கம்போல் நடைபெறும் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!