Tamilnadu

News June 8, 2024

தி.மலை: சன்னதி தெருவில் போக்குவரத்து பாதிப்பு

image

திருவண்ணாமலை சன்னதி வீதியில் விடுமுறை நாளான இன்று உள்ளூர் மற்றும் வெளியூர் புறங்களில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை புரிந்ததை ஒட்டி பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கார்கள் ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வரிசையாக படையெடுத்து கொண்டு இருந்ததால் பெரும் கூட்டம் அலைமோதியது.

News June 8, 2024

தூத்துக்குடி தேர்தலை ரத்து செய்ய கோரி மனு

image

துாத்துக்குடி மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பொன்குமரன் என்பவர் போட்டியிட்டார். இவர், தேர்தல் பிரசாரத்தின் போது முக்கிய அரசியல் கட்சிகளின் விதிமீறல்கள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரிடம் அவ்வப்போது புகார் மனு அளித்தார். இந்நிலையில், அவர் தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையர்கள் 8 வாரத்தில் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News June 8, 2024

அரசு மகளிர் கல்லூரியில் 10 ஆம் தேதி முதல் கலந்தாய்வு

image

மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 10 ஆம் தேதி தொடங்குவதாக கல்லூரி முதல்வர் வானதி நேற்று தெரிவித்துள்ளார். 2024-25ம் ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற 10, 12, 13 ஆம் தேதி ஆகிய 3 நாட்கள் தினமும் காலை 9 மணிக்கு கல்லூரி கயல் அரங்கத்தில் தொடங்கி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

News June 8, 2024

காவல்துறை தேர்வுக்கான போட்டி எழுத்துத் தேர்வு

image

ஊர்க்காவல்படை(ஆண் மற்றும் பெண்), காவல் துறை, புதுவை தேர்வுக்கான போட்டி எழுத்துத் தேர்வு, குடிமை பணிகள் காரணமாக புதுவையில் 30.06.2024 காலை 10 – மதியம் 12 மணி வரை நடைபெறும். 16.06.2024 அன்று UPSC தேர்வு நடைபெறுகிறது. ஹால் டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்யும் தேதி விரைவில் ஆட்சேர்ப்பு இணையதளத்தில் வெளியிடப்படும். https://recruitment.py.gov.in தளத்தில் கூடுதல் தகவல்களை காணலாம்

News June 8, 2024

மக்களவைத் தேர்தல் தோல்வி: இபிஎஸ் விளக்கம்

image

மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு முதன் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘பிரதமர் மோடி 8 முறை தமிழகம் வந்து பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரைச் செய்தார். அதிமுக சார்பில் நான் ஒருவன் மட்டுமே தமிழகம் முழுவதும் பரப்புரைச் செய்தேன். தேமுதிகவின் பிரேமலதாவும் பரப்புரைச் செய்தார் எனத் தெரிவித்தார்.

News June 8, 2024

குரூப்-4 தேர்வுக்கு 291 மையங்கள் தயார்

image

விருதுநகர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த 71,384 பேர் எழுத 291 மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள 291 முதன்மை கண்காணிப்பாளர்கள், துணை தாசில்தார் நிலையில் 53 நடமாடும் குழுக்கள், துணை ஆட்சியர் நிலையில் 10 பறக்கும் படைகள், 291 தேர்வு மையங்களுக்கு வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News June 8, 2024

கடலூரில் என்சிசி மாணவர்கள் பாய்மர படகு பயணம்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி முதல் காரைக்கால் வரை என்சிசி மாணவர்களின் பாய்மர படகு பயணம் மேற்கொண்டனர்.இதில் சுமார் 70 என்சிசி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்தக் குழுவினர் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் வரை சுமார் 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் மேற்கொள்கின்றனர். கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் இந்த பாய்மர படகு பயணத்தை கடலூர் துறைமுகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

News June 8, 2024

புதுக்கோட்டை:ஊர் காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

image

கடற்கரையோர காவல் நிலைய ஊர் காவல் படை பணிகளுக்கு மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது இதற்கான விண்ணப்பங்களை வருகின்ற 10ம் தேதி முதல் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அருகே உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வருகின்ற 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதிக்குள் காலை 10 மணி முதல் 5 மணி வரை கல்விச் சான்றிதழ்கள் அசல் மட்டும் நகலுடன் நேரில் வருமாறு புதுக்கோட்டை எஸ்பி செய்தி வெளியீடு.

News June 8, 2024

மாஞ்சோலை விவகாரம் பரிசீலனை செய்யப்படும் – ஆட்சியர்

image

நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை விவகாரத்தில் எஸ்டேட் பணியில் இருந்து வெளியேற விரும்பும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வசதிகளும் பட்டா வீடுகளும் வழங்கிட உரிய உதவிகள் செய்திட ஏற்கனவே அரசின் அறிவுரைகள் பெறப்பட்டுள்ளது. மாஞ்சோலையை அரசே எடுத்து நடத்த  வேண்டும் என்ற  கோரிக்கை அரசுக்கு பரிசீலனை செய்து அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று உறுதி அளித்தார்.

News June 8, 2024

ஈரோட்டில் இலவச குருப்-1 பயிற்சி வகுப்பு

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://me-qr.com/rxKmeKR4 என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!