India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் இன்று வழங்கினர். மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும் இலவச பாடநூல் மற்றும் சீருடை ஆகியவற்றை எந்தவித குறைபாடும் இல்லாமல் வழங்கிட கல்வித்துறை அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மேல்நேத்தப்பாக்கம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ விஜயவினாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி, ஸ்ரீ மதுசூதனப்பெருமாள், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் என 5 கோவில்களுக்கு மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அரசு தானியங்கி பணிமனையில் காலியாக இருக்கும் கம்மியர் (மோட்டார் வாகனம்) தொழிற்பழகுநர் பயிற்சியிடங்கள் நான்கினை நிரப்புவதற்கான நேர்முகத்தேர்வு, அரசு தானியங்கிப் பணிமனையில் 14.6.2024 காலை 10 மணி முதல் 1மணி வரை நடைபெறவுள்ளது. இதில் பத்தாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ.யில் கம்மியர் முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், பொது மக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு துறை சார்ந்த 271 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. உடன் திட்ட முகமை இயக்குனர் உமா மகேஸ்வரி மற்றும் பலர் இருந்தனர்.
புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது “எக்ஸ்” தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து
தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்களா ? என பார்ப்போம் என்று பதிவு பேசுபொருளாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வங்காள விரிகுடா கடலோர பகுதிகளில் இன்று (ஜூன் 10) அதீத அலை ஏற்படும் அபாயம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மீனவர்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு சிறப்பு எச்சரிக்கையும் அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து தற்போது சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்ற மாவட்ட காவல்துறையினருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R.சிவபிரசாத் வாழ்த்து தெரிவித்தார். மேலும் தங்களது பணி மென்மேலும் சீரும் சிறப்புமாய் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு 50% மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் நேற்று தெரிவித்துள்ளார். பசுந்தாள் உர உபயோகத்தை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு முதல்வரின் ‘மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் பசுந்தாள் உர உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நாளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற இருந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இன்று விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜூன் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 21.06.2024 காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள இருப்பதால் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவித்தார்.
Sorry, no posts matched your criteria.