Tamilnadu

News June 10, 2024

கிருஷ்ணகிரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவடைந்தது. இந்த நிலையில் வழக்கம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ.ஆ.ப., தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News June 10, 2024

அந்தியூர்: வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

image

அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பர்கூர் மலை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இன்று அந்தியூர் எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதில், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மக்களும் கலந்துகாெண்டனர். 

News June 10, 2024

குமரியில் 266 மனுக்கள் பெறப்பட்டன

image

நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 266 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர். ஶ்ரீதர் அறிவுறுத்தினார்.

News June 10, 2024

சென்னையில் தோன்றிய வானவில்

image

சென்னையில் தற்போது ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், சில இடங்களில் காற்று பலமாக வீசி வருகிறது. இந்நிலையில் சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே வானவில் தோன்றியது. இதனை அப்பகுதியில் செல்லும் மக்கள் பார்த்து ரசித்தவாறு செல்கின்றனர். சிலர் அதனை தங்களது மொபைலில் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

News June 10, 2024

மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கிய கலெக்டர்

image

ஈரோடு அரசு மாதிரி பள்ளியில் மாணவர்களுக்கு 2024 -2025 கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்களை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சங்கரா கலந்துகொண்டு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், முதன்மை கல்வி அலுவலர் சம்பத் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

News June 10, 2024

டவரில் ஏறிய நபரால் பரபரப்பு

image

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா வாமலை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். மது போதையில் இருந்த அவர் இன்று மதியம் திடீரென அப்பகுதியில் இருந்த 45 அடி உயரமுள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தின் மீது ஏறி உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த குன்னத்தூர் போலீசார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சுரேஷை கீழே இறங்க செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News June 10, 2024

கூட்டணியுடன் ஆட்சி அமைக்க முதல்வர்தான் காரணம்

image

கோவையில் வரும் 15ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசுகையில் இந்திய அளவில் இந்தியா கூட்டணி அமைய மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பு எடுத்ததாக தெரிவித்தார். இதனால் தான் பாஜக அதிக பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது என்றார்.

News June 10, 2024

குறைதீர் கூட்டத்தில் உடனடி தீர்வு

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான தொழில் பயிற்சி உபகரணங்கள் மற்றும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. 

News June 10, 2024

முதல்வருக்கு அழைப்பிதழ் வழங்கல்

image

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன் மற்றும் ஸ்ரீ விஜயபாமா சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோரது இல்ல திருமண விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இரு குடும்பத்தாரும் இன்று நேரில் சென்று அழைப்பிதழை வழங்கினர். இந்நிகழ்வில், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் என பலரும் கலந்து கொண்டனர்.

News June 10, 2024

கரூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் 261 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், 3 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை ஆட்சியர் தங்கவேல் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், தனித்துறை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!