Tamilnadu

News June 12, 2024

கள்ளக்குறிச்சி: முதல்வருடன் முன்னாள் எம்.பி.சந்திப்பு

image

கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்‌கௌதமசிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று (ஜூன் 11) தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டு வாழ்த்துக்களைப் பெற்றார். உடன் திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News June 12, 2024

தருமபுரி: சிப்காட் அமைக்க கருத்து கேட்பு கூட்டம்

image

தருமபுரி மாவட்டம் ஏ.ஜெட்டிஅள்ளியில் தருமபுரி வட்டம், அதகப்பாடி, நல்லம்பள்ளி வட்டம் தடங்கம், அதியமான்கோட்டைமற்றும் பாலஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் புதிய தொழிற்பூங்காவை சிப்காட் நிறுவனம் நிறுவ தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையில் நேற்று(ஜூன் 12) பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. 

News June 12, 2024

ராம்நாடு: இன்று முதல் 3 நாள் மின்தடை

image

பெருங்குளம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட கீழநாகாச்சி
பீடரில் உள்ள பழுதடைந்த மின் கம்பங்கள், மின்வயர்களை மாற்றி அமைக்கும் பணிக்காக இன்றுமுதல் (ஜூன் 12) நாளை மறுநாள்வரை (ஜூன் 14) 3 நாள்களுக்கு உச்சிப்புளி, துத்திவலசை, என்மனம்கொண்டான், காமராஜர் நகர், மரம் வெட்டிவலசை, அரசு ஆரம்ப சுகாதர நிலையம், மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 முதல் 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 11, 2024

வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜுன் 11) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 150 லிட்டர் கள்ளச்சாராயம், 800 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 49 மதுபாட்டில்கள், 2 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 16 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ‌

News June 11, 2024

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

image

நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 11) தெரிவித்ததாவது, நெல்லை மாவட்டத்தில் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை வரும் 28ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இது சம்பந்தமாக மேலும் விபரங்களுக்கு மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

News June 11, 2024

கூட்டுறவு மேலாண்மை முழுநேர பட்டய பயிற்சி

image

ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை ஓராண்டு பயிற்சி நடப்பாண்டு தொடங்கப்பட உள்ளது. 17 வயது பூா்த்தி அடைந்தவா்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்தி இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0424-2998632 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

image

ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு அடையாள அட்டை வழங்கிட
வரும் 21ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அடையாள அட்டை, ஆதார் அட்டை திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இன்று தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

அரசு பொருட்காட்சியால் ரூ.10 லட்சம் வருவாய்

image

செய்தி – மக்கள் தொடர்பு துறை சார்பில் கோவை வ.உ.சி மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் சேர்ப்பிக்கும் வகையில் 34 அரசு துறை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.10,05,915 வருவாய் கிடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 11, 2024

சேலத்தில் பதிவான வெயிலின் தாக்கம்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்.11) மாவட்டத்தில் அதிகபட்சமாக 94.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News June 11, 2024

முதலமைச்சருக்கு நகரமன்ற தலைவர் நேரில் வாழ்த்து

image

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகர்மன்றத்தலைவர்
பாத்திமா பசீரா தாஜ் தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினை இன்று சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்தார்.  பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளையும் முழுமையாக வெற்றி பெற்றதற்கு முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

error: Content is protected !!