India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரத்தில் கலை பண்பாட்டுத் துறை, சவகர் சிறுவர் மன்றம் சார்பில் கோடை கால இலவச கலைப்பயிற்சி முகாம் துவக்க விழா இன்று நடந்தது. கவுன்சிலர் ஜெயராமன் தலைமை வகித்தார். மே 14 வரை மாலை 4 – 6 மணி வரை நடைபெற உள்ள இம்முகாமில் 6 முதல் 16 வயது மாணாக்கருக்கு பரதம், ஓவியம், குரலிசை, சிலம்பம்
கற்றுத்தரப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் லோகசுப்ரமணியன் ஏற்பாடு செய்தார்.
மன்னார்குடி ரோட்டரி சங்கம் மீனாட்சி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் இன்று ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் சங்கர் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் மீனாட்சி சூரிய பிரகாஷ் முன்னிலை வகித்தார் 210 பேரை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ததில் 68 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு கோவை அழைத்து செல்லப்பட்டனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 95.84% மாணவர்கள் நீட் தேர்வை எழுதி உள்ளனர்- 5196 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 4980 பேர் நீட் தேர்வு மையங்களுக்கு நேரடியாக சென்று நீட் தேர்வு எழுதி உள்ளனர். இதில் 216 தேர்வு எழுதவில்லை. மேலும் நீட் தேர்வில் கேள்விகள் சுலபமாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண் எடுப்போம் எனவும் மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
விக்கிரவாண்டி வட்டம் பனையபுரம் கிராமத்தில் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட ஸ்தலம் ஸ்ரீ சத்யாம்பிகை சமேத நேத்திர தாராகேஸ்வரர் சிவாலயத்தில் இன்று பிரதோஷம் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு கிராமத்தில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். ஈஸ்வரன் பார்வதியும் கோவிலை வலம் வந்தனர். அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர் கோவில்பட்டி போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று கோடை விடுமுறை என்பதால் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் அரசு பேருந்து மிகக் குறைவாகவே இயக்கப்பட்டதால் பேருந்துக்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் மேலூர் அரசு கலை கல்லூரியில் உள்ள சேர்க்கை வசதி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்டத்தில் 9 மையங்களில் நீட் தேர்வு எழுத 4,005 மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், இன்று 3,847 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். இன்று நடைபெற்ற நீட் தேர்வில் 158 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கரையில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓம் ஸ்ரீகால பைரவர் திருக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றதையொட்டி அத்திமரம் பாலாலய யாகம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் கோவில் பூசாரி சேகர் ஆகியோர் தரிசனம் மேற்கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் இன்று 13 நீட் தேர்வு மையங்களில், நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 7128 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் இன்று நடைபெற்ற தேர்வில் 6,932 மாணவர்கள் மட்டுமே பங்கேற்று இருந்தனர். 188 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை நீட் தேர்வில் விண்ணப்பித்து விட்டு ஏன் தேர்வு எழுத வில்லை என தேர்வு அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலைத்துறையின் கீழ் செயல்படும் உதகை தட்சிணாமூர்த்தி திருமடம் மடாதிபதி தெரிவித்த தகவல்:-
உதகை, காந்தல் காசி விசுவநாதர் திருக்கோயிலுக்கு ஆகம விதிகளின்படி பயிற்சி பெற்ற இரண்டு அர்ச்சகர்கள் , இரண்டு பெண் துப்புறவு பணியாளர்கள் மற்றும் ஒரு இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 03.06.2024 என்று கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.