India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கெலமங்கலத்தில் பட்டாளம்மன் கோவில் தேர்திருவிழா மே 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு பட்டாளம்மனை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. அதற்காக சத்தியம்மா உருவ பொம்மையை 5 இடங்களில் வைத்து வழிப்பட்டனர். மேலும், வீட்டில் சமைத்த தயிர் சாதத்தை கொண்டு வந்து பக்தர்கள் படைத்தனர். அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு கிடா வெட்டி பூஜை செய்தனர்.
தென்காசி, பொட்டல்புதூரில் அதிமுக சார்பில் இன்று 11வது நாளாக தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் நீர் ஆகாரங்கள் கோடை வெயிலை முன்னிட்டு வழங்கப்பட்டது. கடையம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். பாப்பான்குளம் கிளைச் செயலாளர் நல்லசிவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சென்னை, மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் வேதா மேரி (68). இவர் குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அனுபவித்து வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேதா மேரி இன்று இறந்தார். புகாரின் பேரில் புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடம் மிகவும் பிரசித்தி பெற்ற விற்பனை கூடமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மற்றும் கிராம பகுதியில் இருந்து விவசாயிகள் விளைவித்த நெல் மற்றும் மணிலா பொருட்களை கொண்டு வந்தனர். இன்று ஒரே நாளில் மட்டும் 10,000 நெல் மூட்டைகள் விற்பனைக்காக குவிந்தன.
சென்னையில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை மே 5 ஆம் தேதி ராட்வீலர் நாய்கள் கொடூரமாக கடித்து குதறின. இந்த வகை நாய்களை கூண்டில் வளர்ப்பதுதான் நல்லது. எலும்பை கடித்து உடைக்கும் அளவுக்கு அதன் தாடைகள் வலுவானது. இந்தியா மட்டுமின்றி இஸ்ரேல், ரஷ்யா, ஸ்பெயின், உக்ரைன், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் இந்த வகை நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று (மே.7) விடுத்துள்ள செய்தி குறிப்பு. பல்கலைக்கழகத்தின் கீழ் சங்கரன்கோவில், சேரன்மகாதேவி, நாகம்பட்டி, புளியங்குடி, திசையன்விளை, பணகுடி ஆகிய இடங்களில் பல்கலைக்கழக கல்லூரிகள் இயங்குகின்றன. இங்கு இளங்கலை, முதுகலை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்ற 2 அரசு பள்ளி தலைமையாசிரியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (மே 7) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாகி பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பத்தின் அளவு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் அனேக இடங்களில் வரும் வியாழன் (மே-9) முதல் கோடை மழைக்காலம் துவங்க வாய்ப்பு உள்ளது. மேலும் தினசரி பிற்பகல் நேரத்தில் மாலையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு காலை 11 மணிக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் காலையில் வராமல் மதியம் 2.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார். ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேடில் வந்து இறங்கிய முதலமைச்சர் ஏவ்லாக் ரோட்டில் உள்ள தனியார் பங்களாவுக்கு சென்றார். இங்கு 5 நாட்கள் தங்கியிருந்து தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக தெரிகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் மாணவி ஒருவர் நுழைவுச்சீட்டை மறந்து விட்டு தேர்வு மையத்திற்கு வந்த நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவிக்கு அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் கணேசன் உடனடியாக நுழைவு சீட்டை பதிவிறக்கி மாணவிக்கு தேர்வெழுத உதவி செய்தார். இச்செயலைப் பாராட்டி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் கணேசனை நேரில் அழைத்து பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.