Tamilnadu

News January 14, 2026

கிருஷ்ணகிரி இளைஞர்கள் கவனத்திற்கு…

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்புகள் மற்றும் புதுமையாளர்களுக்காக, 15வது Source India – Electronics Supply Chain Expo கண்காட்சி நடத்தப்படுகிறது. ELCINA அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு, StartupTN ஆதரவுடன் நடைபெறும் இந்நிகழ்வு, பிப்ரவரி 10, 11 தேதிகளில் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது.

News January 14, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகள் விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாக மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூடுதல் எண்ணாக 100 ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

தி.மலை: காவல்துறை இரவு ரோந்து விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (14.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 14, 2026

சென்னை: தை முதல் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்

image

சென்னை மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
*கபாலீஸ்வரர் கோயில் (மயிலாப்பூர்)
*பார்த்தசாரதி கோயில் (திருவல்லிக்கேணி)
*வடபழனி ஆண்டவர் கோயில்
*காலிகாம்பாள் கோயில் (சென்னைப் பஜார்)
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 14, 2026

கிருஷ்ணகிரி: கணவருடன் சண்டை.. மனைவி விபரீதம்

image

நகாரசம்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடைய மனைவி முருகம்மாள். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் டிச.25 அன்று வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு பெங்களுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் ஜன-13 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் பட்டியல்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (ஜன.14) இரவு உட்கோட்ட ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, காவல் ஆய்வாளர்கள் சிவந்திப்பட்டி ராபர்ட், மூலக்கரைப்பட்டி சுகாதேவி, உவரி உமா, பத்தமடை ஜோதிலட்சுமி, அம்பாசமுத்திரம் சண்முக வேல் ஆகியோர் திருநெல்வேலி ஊரகம், நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்கின்றனர்.

News January 14, 2026

செங்கல்பட்டு மாவட்டம் இரவு ரோந்து பணி விவரம்.

image

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சியில், இரவு நேரங்களில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் காவலர்களின், பணி விவரங்கள் இன்று 14 01 2026 அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் தனித்தனி படைகள் அமைத்து இரவு நேர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

News January 14, 2026

சென்னையில் திருக்குறள் போட்டி அறிவிப்பு!

image

சென்னை மாவட்டத்தில் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் திருக்குறள் சார்ந்த ஓவியப் போட்டிகள் மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறவுள்ளன. வரும் 19.01.2026 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சேத்துப்பட்டு கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டிகள் நடைபெறும். மேலும் இதில் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News January 14, 2026

காஞ்சி: தை முதல் நாள் செல்ல வேண்டிய கோயில்கள்

image

காஞ்சி மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
* காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்
*ஏகம்பரேஸ்வரர் கோயில்
* வரதராஜப் பெருமாள் கோயில்
* சுப்பிரமணியர் கோயில் (குமரகோட்டம்)
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 14, 2026

சென்னையில் பிரம்மாண்ட வண்ணமீன் திருவிழா!

image

தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சென்னை வில்லிவாக்கம் சிவசக்தி நகரில் “வண்ணமீன் வர்த்தகத் திருவிழா” நடைபெறவுள்ளது. ஜனவரி 15 முதல் 18 வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த விழாவிற்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சர்வதேசத் தரத்திலான வண்ணமீன் விற்பனை மையங்கள், நீர்வாழ் காட்சியகம் மற்றும் 150-க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெறுகின்றன.

error: Content is protected !!
↑