India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடியக்கரை சரணாலயம், 1967-ஆம் ஆண்டு கலைமான்களைக் காப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த சரணாலயத்தில் பல்வேறு வகையான கடல் பறவைகள் இங்கு தென்படுகின்றன. சதுப்பு நிலமாக இருப்பதால் அரிய பறவைகளை இங்கு காணமுடியும். மேலும் நரி, புள்ளிமான் போன்ற விலங்குகளின் வாழ்விடமாகவும் இருக்கிறது. குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கான ஃபிளமிங்கோ பறவைகள் இங்கு இடம்பெயர்ந்து வரும்.
கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் இன்று பல்வேறு இடங்களில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர், ரோஸ்மில்க் , பாதாம் கீர், எவ்வித லேபிள் விபரம் இல்லாத குளிர்பானங்கள், தர்பூசணி மற்றும் இதர பழங்கள், பதநீர் மற்றும் கரும்புச்சாறு, பானிபூரி, போன்றவைகளை கள ஆய்வு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
ஆற்காடு தாலுகா விளாப்பாக்கம் அடுத்த எலந்தன்குட்டை அருகில் உள்ள விவசாய கிணற்றில் மனநலம் பாதிக்கப்பட்டவரான சரவணன் (52) கடந்த 3 நாட்களுக்கு முன்பு விழுந்துள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின் அடிப்படையிவ் வந்த தீயணைப்பு துறையினர் அவரை இன்று மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது, எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகவும், பாஜகவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களை சட்ட சிக்கல்களில் சிக்க வைத்து செயல்படாமல் வேலையை பாஜக அரசு செய்து வருவதாக சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி அரசு, தனியார் கல்லூரிகளில் நீட் அல்லாத பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு அரசின் சென்டாக் அமைப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2024-25 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் சென்டாக் இணையதளமான (www.centacpuducherry.in) ல் விண்ணப்பத்தை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். கடைசி நாள் வருகிற 22 ந்தேதி என அறிவித்தது.
ஏர்வாடி தர்ஹா பகுதியில் உள்ள ஓட்டல்கள், திறந்த வெளி உணவகங்களில் தயாராகும் உணவுகளில் சுவையூட்ட நிறமிகள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதன்படி உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், ஏர்வாடி தர்ஹா பகுதியில் உள்ள உணவகங்களில் இன்று ஆய்வு செய்தார். 12 கடைகளில் நிறமி பயன்படுத்திய உணவு மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினார். கடை உரிமையாளர் 4 பேருக்கு நோட்டீஸ் வழங்கி 2 பேருக்கு ரூ.1000 அபராதம் விதித்தார்.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று தமிழக முழுவதும் வெளியானது. இதில் பல்லடம் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி மகாலட்சுமி 600 க்கு 598 மதிப்பெண் பெற்ற மாநிலத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளார். அவரை பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்எஸ்எம் ஆனந்தன் இன்று நேரில் சந்தித்து பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை சமூக வலைதளம் மூலமாக மூளைச்சலவை செய்து கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் நாட்டில் உள்ள ஐ டி நிறுவனங்களில் வேலைக்கு அழைத்து செல்வதாக ஏமாற்றுகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து 18003093793 என்ற எண்ணில் விசாரித்துவிட்டு செல்ல ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி எச்சரித்துள்ளார்.
திருப்பத்தூரில் கடந்த ஒரு வார காலமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையிலிருந்து கடும் வெயில் வதைத்தது. இன்று 107.96 டிகிரி வெயில் திருப்பத்தூரில் பதிவாகியுள்ளதாக பேரிடர் மற்றும் மீட்புத்துறை வட்டாட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோடை வெயிலால் வனவிலங்குகளை அடுத்து தேன் குழவிகளும், வண்டுகளும், தண்ணீர் தேடி அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது. சின்னாளப்பட்டி அருகே தனியார் பள்ளி வளாகம் ஒன்றில் குடிநீர் குழாயில் தண்ணீர் தேடி அலைந்த தேன் குழவிகள் தண்ணீர் குடிக்கும் அருமையான காட்சி வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.