Tamilnadu

News June 15, 2024

தூத்துக்குடி: 10% வருமான வரி ரிட்டன் தாக்கல்

image

தூத்துக்குடியில் நேற்று அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் வருமான வரித்துறையும் இணைந்து வருமான வரி செலுத்துவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் வருமானவரித்துறை இணை ஆணையர் மனோஜ் பிரகாஷ் கலந்துகொண்டு பேசுகையில், “வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 10 % பேர் மட்டுமே தாக்கல் செய்துள்ளனர்” என அவர் தெரிவித்தார்.

News June 15, 2024

நீலகிரி: 26 உதவி ஆய்வாளர்கள் பதவி ஏற்பு

image

நீலகிரி மாவட்டத்தில் 1999ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்து பணியாற்றி,  தற்போது தலைமை காவலர்களாக இருப்பவர்கள் 26 வருடங்கள் நிறைவு பெற்று உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றனர். இதற்காக  26 பேரும் நேற்று  உத்திரவு ஆணை பெற்றனர். அவர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன் வாழ்த்து தெரிவித்தார்.

News June 15, 2024

ராம்நாடு: கடலுக்குச் சென்ற முதல் நாளில் 2 பேர் பலி!

image

மண்டபம் சேது நகரைச் சேர்ந்த சுதர்சன் என்பவரது விசைப்படகு, வடக்கு கடலில் மீன்பிடிக்க இன்று அதிகாலை சென்றது. 6 நாட்டிக்கல் தொலைவில் சென்ற படகு பழுதாகி கடலில் மூழ்கியது. இதிலிருந்த முஹமது ஹனீபா, பிரசாத் மற்றும் மற்றொரு படகு உதவியாளர் கரை சேர்ந்தனர். மாயமான பாம்பன் பகுதி மீனவர் மூவரில் இருவர் இறந்தனர். இருவரின் உடல்களை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டு மண்டபம் வடக்கு கடற்கரை கொண்டு வருகின்றனர்.

News June 15, 2024

ஆயுதப்படை போலீசாருக்கு எஸ்.பி. அறிவுரை

image

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய மைதானத்தில் இன்று ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி நடைபெற்றது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் காவல்துறையினருக்கு எவ்வாறு பணி செய்ய வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கியதுடன் அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்.

News June 15, 2024

அதிகமுறை ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் சர்வதேச ரத்த தான தினத்தை முன்னிட்டு அதிகமுறை ரத்ததானம் வழங்கிய கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று (ஜூன் 14) நடந்தது. இந்த விழாவிற்கு ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கலியமூர்த்தி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

News June 15, 2024

திருநங்கைகளுக்கு ஆட்சியர் தகவல்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை வழங்கிட ஏதுவாக  சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் ஜூன் 21ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்தார்.

News June 15, 2024

உண்டு உறைவிட பள்ளிகளை நிர்வகிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வியில் பின் தங்கியுள்ளவர்களுக்காக செயல்பட்டு வரும் 6 கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளிகளை நிர்வகிக்க அனுபவம் மற்றும் பெண் கல்வியில் ஆர்வம் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் மற்றும் கருத்துக்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 15, 2024

கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

மறைந்த முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, மக்களவை தோ்தலில் வெற்றி, மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா கொடிசியா மைதானத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் முதல்வர், அமைச்சர்கள், எம்பிக்கள், இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் கொடிசியா வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News June 15, 2024

லால்குடி எம்எல்ஏவின் மரண அறிவிப்பு; திமுகவில் பரபரப்பு

image

லால்குடி சட்டமன்ற எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன் இயற்கை எய்ததால் அந்த தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று எம்எல்ஏ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் இன்று பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.மேலும்,அமைச்சர் நேரு தனது முகநூல் பக்கத்தில் லால்குடி தொகுதியில் மேற்கொண்ட ஆய்வு குறித்து புகைப்படங்கள் பதிவு செய்திருந்தார்.அதற்கு தன்னை அழைக்காத காரணத்தினால் இப்படி ஒரு கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

News June 15, 2024

பயன்பாட்டில் இல்லாத புகார் எண்கள்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வசதிக்காக எண் 77900-19008, 04633- 215000 என்ற வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டன. இந்த எண்கள் கடந்த 2 மாதங்களாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் அவசர தேவைக்கு மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் இன்று கோரிக்கை விடுத்தனர்

error: Content is protected !!