Tamilnadu

News June 16, 2024

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி

image

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நபார்டு மைராடா நீர்வடிப்பகுதி திட்டத்தின் கீழ், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி மற்றும் நிலைத்த விவசாயத்திற்கான தொழில் முனைவு மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. மைராடா தொண்டு நிறுவனத்தின் திட்ட அலுவலர்முருகன்,எத்திராஜ், கெம்பம்மாள், தலைமை ஆசிரியர் வீரமணி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

News June 16, 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

image

திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து அ.கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் காத்தமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

News June 16, 2024

பொதுமக்கள் கடலில் குளிக்க வேண்டாம் என வலியுறுத்தல்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி. இங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒட்டி குறிப்பாக மாலையில் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வரும் நிலையில் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் காவல் துறை வலியுறுத்தல்.

News June 16, 2024

சிதம்பரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடன்

image

சிதம்பரம் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடன் மேளா நேற்று நடைபெற்றது. இணைப்பதிவாளர் கோமதி தலைமை தாங்கினார். பொது மேலாளர் விஜயகுமார், உதவி பொது மேலாளர், பணியாளர்கள் முன்னிலை வகித்தனர். கடன் மேளாவில் பொதுமக்கள் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு மகளிர் குழு ஊதியம் பெறும் ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோருக்கு 7 கோடி கடனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

News June 16, 2024

குடிநீர் பிரச்சினையை தீர்த்த கென்னடி எம்எல்ஏ

image

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோகுல் காந்தி தண்ணீர் பிரச்சனை குறித்து தெரியப்படுத்தினார். தேர்தல் முடிந்தவுடன் அப்பகுதியில் புது தண்ணீர் இணைப்பு அமைத்து அங்குள்ள மக்களுக்கு தண்ணீர் பிரச்சனையை கென்னடி எம்எல்ஏ தீர்த்துக் கொடுத்தார். மேலும் அதனை நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

News June 16, 2024

திருப்பத்தூர்: ஓய்வூதியர் குறைதீர் முகாம்

image

அஞ்சல் துறையில் ஓய்வூதியம் பெறும் அஞ்சல், ரயில்வே, தொலைபேசி துறைகளின் ஓய்வூதியதாரர்களுக்கான குறைகள் ஏதேனும் இருப்பின் தெரிவிப்பதற்காக குறைதீர் முகாம் மேற்கு மண்டல அலுவலகத்தில் வரும் ஜுலை 3-ஆம் தேதி காணொலி மூலம் நடைபெற உள்ளது. எனவே, ஓய்வூதியதாரர்கள் நிவர்த்தி செய்ய முடியாத குறைகளை முழு விவரத்துடன் எழுதி திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட அலுவலகத்துக்கு வரும் 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

News June 16, 2024

தருமபுரி: குடிநீரை காய்ச்சி குடிங்க மக்களே

image

கர்நாடகா மாநிலம் மற்றும் பெங்களூரில் தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் வரும் மழைநீர் மண் கலந்து கலங்களாக ஒகேனக்கல் பகுதியில் வந்து கொண்டிருக்கிறது. எனவே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களை நன்கு காய்ச்சி ஆறவைத்து குடிக்குமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

News June 16, 2024

நெமலி: நிலுவைத் தொகை வசூல்

image

நெமிலி தாலுகா பனப்பாக்கம் உள் வட்டம் கர்ணாவூர் அடுத்த குப்பக்கல்மேடு கிராமத்தைச் சேர்ந்த கோபால், சிவராமன் ஆகிய இருவரிடம் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நிலுவைத் தொகை செலுத்துமாறு வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் விஏஓ ஆகியோர் இன்று தெரிவித்தனர் . ஜமாபந்தி நடைபெறவிருக்கும் நிலையில் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தொகைகளை வசூலிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 16, 2024

முன்னாள் அமைச்சரின் முன் பிணை மனு ஒத்திவைப்பு

image

வாங்கல் குப்புச்சிபாளையம் காட்டூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரை மிரட்டித் தாக்கியதாகவும், அவருடைய ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை எழுதி வாங்கியது தொடர்பாகவும் அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் பிணை கேட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதனை நேற்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் முன் பிணை வழக்கை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

News June 16, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிக்கை

image

ஜூன்.19ஆம் தேதி அன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ராகுல் காந்தியின் பிறந்த நாளை நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்கணேஷ் நிர்வாகிகளுக்கு நேற்று அறிவுறுத்தி உள்ளார்.

error: Content is protected !!