India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காவேரிப்பட்டிணம் அடுத்த சுண்டகாபட்டி காந்தி கிரிக்கெட் கிளப் சார்பாக மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 12 மணி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அது சமயம் மாவட்டத்தில் உள்ள மட்டைப்பந்து வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் பரிசு 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. மேலும் 8 பரிசுகள் வழங்கப்பட உள்ளது எனக் கூறியுள்ளனர்.
வைகை அணையில் இருந்து இன்று பாசனத்திற்காக விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு 915 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ அல்லது ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சிவகாசி அருகே கீழதிருத்தங்களில் நேற்று திடீரென பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் சார்பில் இன்று தலா ரூ.5 லட்சம் நிதி உதவி ஆலை சார்பில் வழங்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10 ) வெளியான நிலையில் திருநெல்வேலி பேட்டை தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.n என்ற இணையதளம் மூலம் ஜூன் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் தஞ்சாவூர் 93.40% சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் 90.87% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 6,019 பேர் தேர்வு எழுதி 5,261 தேர்ச்சி; 6,380 மாணவிகள் தேர்வு எழுதி 6,006 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தம் 12,399 பேர் தேர்வு எழுதி 11,267 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 14,402 மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில் 13,032 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 14,513 மாணவிகள் தேர்வு எழுதி 13,974 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தம் 28,915 பேர் தேர்வு எழுதி 27,006 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் 93.40% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் கிக்கானி பள்ளி அருகே, காந்திபுரம் 49வது வார்டு பொன்னேரி நகர், கிழக்கு மண்டலம் 44வது வார்டு லட்சுமி மில், மசக்காளிபாளையம், சின்னசாமி லே-அவுட் உள்ளிட்ட இடங்களில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 24 மணி நேர குடிநீர் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர் பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் கரூர் மாவட்டத்தில் மொத்தம் 11366 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 10638 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 93.59 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 13 வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த வருடம் மாநில அளவில் 20 ஆவது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 10 ஆயிரத்து 375 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 8597 மாணவர்கள் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதம் 82.86% ஆக உள்ளது அதேபோல் 9791 மாணவிகள் தேர்வு எழுதியதில் 8,876 மாணவிகள் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதம் 91.6% ஆக உள்ளது. மாணவர்களை விட 8.2% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது அதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 86.83 % மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று தமிழக அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 34 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Sorry, no posts matched your criteria.