India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கம் பகுதியில் அகில இந்திய அளவிலான மகளிர் காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பெண் காவலர்கள் பங்கேற்றனர். இதையடுத்து இறுதி நாளான நேற்று வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக பேராசிரியர் ஜெயராமன், மகேஸ் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கூறைநாடு PM.பாசித், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் O.ஷேக் அலாவுதீன் உள்ளிட்ட குழுவினர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களை சந்தித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மீத்தேன் சுற்றுச்சூழல் நிலத்தடி நீர் மாசுபடுதல் குறித்து கோரிக்கைகளை முன் வைத்தனர்.
கடலூர் உண்ணாமலை செட்டி சாவடியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் அருகில் வருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் தென்னிந்திய அளவிலான மாபெரும் கபாடி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி 22-ம் தேதி மாலை 3 மணிக்கு துவங்கும். போட்டியில் பங்கேற்பவர்கள் கட்டாயம் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும். ஆட்டம் அனைத்தும் செயற்கை ஆடுகளத்தில் நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை உண்ணாமலை செட்டிசாவடி மக்கள் செய்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4-தாலுகாவிலும் 1433-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இன்று (ஜூன்-18) நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் (தாலுகா வாரியாக) குன்னம்-107 மனுக்களும், வேப்பந்தட்டை -175 மனுக்களும், ஆலத்தூர்-48 மனுக்களும், பெரம்பலூர் – 51 மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜூன்-20, 21,25,27 ஆகிய நாட்களில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் +2 டூ தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெறாத மாணவர்கள் ,தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடைப்பெறுகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் நாளை முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.
இராமநாதபுரத்தில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், மற்றும் பொதுமக்கள் பலர் பி.எஸ்.என்.எல் சேவையை பயன்படுத்துகின்றனர். கடந்த சில நாட்களாக பி.எஸ்.என்.எல்
நெட்ஒர்க் சேவை இடையிடையே துண்டிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் அலைபேசியில் அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ளமுடியாமல் சிரமடைந்து வந்தனர். இந்நிலையில் பி.எஸ்.என்.எல் இணைய சேவை இன்றும் பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மே மாதத்திற்குரிய துவரம் பருப்பு, பாமாயில் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஜூன் மாதம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பெற்றுக் கொள்ளலாம் என உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது. மே மாதம் வாங்க தவறியவர்கள் தங்கள் குடும்ப அட்டைக்கு தேவையான பொருட்களை வாங்கி பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). இவர் தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று மாலை கோல்டன் நகர் பகுதியில் உள்ள பேக்கரியில் டீ அருந்தி கொண்டிருந்த போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் இவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை: மாநிலம், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சுயஉதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு மணிமேகலை விருதுகள் வழங்கப்படுகிறது. 2023-24 ஆம் ஆண்டிற்கான விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் தீபக்ஜேக்கப் அறிவித்துள்ளார்.
சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று இரவு 9 மணியளவில் இருந்து மழை பெய்து வருகிறது. அதன்படி, நந்தனம், நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், சூளைமேடு, தி.நகர், கிண்டி, சைதாப்பேட்டை பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதியில் நிலவும் வளிமண்ல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதியில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.