India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு மட்டுமே தீர்வல்ல, அவர்களை வெளியேற்றவே கூடாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 6 தலைமுறையாக இரத்தம், வியர்வை சிந்தி உருவாக்கப்பட்டது மாஞ்சோலை எஸ்டேட்; நீதிமன்றத்தின் தற்காலிக தீர்ப்பை ஏற்கிறேன்; மாஞ்சோலை மக்களை அங்கிருந்து அகற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் கூறியுள்ளார்.
நீலகிரி ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாற்று திறனாளி நல துறையின் மூலம், 2021 மே 7 முதல் இதுவரை 1,674 மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு ரூ.7 கோடி மதிப்பில் பராமரிப்பு உதவி தொகையும், 937 கடும் ஊனமுற்றோருக்கு ரூ.3.71 கோடி மதிப்பில் பராமரிப்பு உதவி தொகையும், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 44 பேருக்கு ரூ.18.10 உதவி தொகையும் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று 17 கிலோமீட்டர் மழை நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் 50,280 கிலோ தூசி மற்றும் வடிகால் வண்டல் நீக்கப்பட்டது. இறுதியாக திருச்சியில் இன்று 17 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் தேனி முதல் வீரபாண்டி சாலையில் கடந்த இரண்டு வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முதல் மேகம் கூட்டங்களுடன் மழை பெய்யும் சூழல் இருந்து வந்தது. தற்போது லேசான சாரல் மழை பெய்தது தேனி மக்கள் மகிழ்ச்சி ஏற்படுத்தியது. வருகிற 22 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற குழு அமைத்து மாஞ்சோலை மக்களின் தேவையை அறிய முற்பட வேண்டும் என மாஞ்சோலை தொழிலாளர் தரப்பை சேர்ந்த ஜிப்சன் தெரிவித்துள்ளார். தேயிலை தோட்டத் தொழிலாளர் குடும்த்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவச கல்வி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தில் மாநில அளவிலான 16 வயதிற்குட்பட்ட மாவட்ட அணி தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இதில் 01.01.2008 தேதிக்கு பின்பு பிறந்தவர்கள் இதில் பங்கேற்கலாம். ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், படித்து கொண்டிருப்பதற்கான சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழுடன் நாளை மாலை 4 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கும் வீரர்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் வரும் ஜூன் 24 முதல் ஜூன் 26 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு வரும் ஜூன் 24 மற்றும் 25 ஆம் தேதியும், கலைப் பாடப்பிரிவுகளுக்கு ஜூன் 26 மற்றும் 27 ஆம் தேதியும், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கு 28 ஆம் தேதியும் கவுன்சிலிங் நடைபெறுகிறது.
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதி ஏற்படுத்தும்வரை அவர்களை வெளியேற்றக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலையில் குத்தகை முடியும் நிலையில், 4 தலைமுறையாக வாழ்ந்த மக்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டதை தொடர்ந்து, மறு பணி வாய்ப்பு வழங்கும் வரை குடும்பத்திற்கு ரூ.1,000 வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் மே 6 அன்று வெளியானது. இதில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடைபெறும். இந்நிலையில், நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்துள்ளதாவது, +2 துணைத்தேர்வுக்கு ஹால் டிக்கெட் இன்று(ஜூன் 19) வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் இன்று(ஜூன் 19) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளார்
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.இந்த நிலையில் நேற்று கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 38 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது
Sorry, no posts matched your criteria.