Tamilnadu

News July 8, 2024

மாற்றுதிறனாளிகள் குறை கேட்பு முகாம்

image

தென்காசி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் முகாம் நாளை முதல் மாதந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று ஊராட்சி ஒன்றியங்களிலும், 2 மாதங்கள் ஒரு முறை 2வது செவ்வாய்க்கிழமை மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம் திட்ட இயக்குனர் அலுவலகத்திலும் நடைபெறயுள்ளது. இதை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் கமல்கிஷோர் கேட்டு கொண்டார்.

News July 8, 2024

வேலூரில் சிறப்பு மனுநீதி முகாம் – கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் மனுநீதி நாள் முகாம் வேலூர் வட்டம் கம்மவான்பேட்டை கிராமத்தில் வருகிற (ஜூலை 10) காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 8) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News July 8, 2024

வேலூர் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் இடமாற்றம்

image

வேலூர் மாவட்டம் ஓட்டேரியில் இயங்கி வந்த தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் எளிதில் வந்து செல்ல ஏதுவாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் “ஏ” பிளாக்கில் அறை எண் 415-ற்க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 8) தனது செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

News July 8, 2024

விக்கிரவாண்டியை சேர்ந்தவர்களுக்கு விடுமுறை

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருகின்ற 10ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் முருகப்பிரசன்னா இன்று அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News July 8, 2024

வண்டல் மண் எடுக்க அனுமதி அணை

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 8) அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி குளம் மற்றும் கண்மாயிலிருந்து களிமண், வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கு கட்டணமின்றி எடுத்துச் செல்லும் திட்டத்தை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட ஊரக முகமை வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் ஜெயசீலன் 10 விவசாய பெருமக்களுக்கு மண் எடுப்பதற்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்.

News July 8, 2024

“அதிகாரிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடையாது” 

image

சேலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தபின் காவல்துறை அதிகாரிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடையாது. மேலும் பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சியின் பொறுப்பாளர்களுக்கும் பாதுகாப்பில்லை; திட்டமிட்டுதான் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது என்றார். 

News July 8, 2024

கள்ளச்சாராய விழிப்புணர்வு கூட்டம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியராக கூட்டங்கள் வைத்து இன்று கள்ளச்சாராயம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் கமல் கிஷோர் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டு கள்ள சாராயம் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

News July 8, 2024

3 மாதத்தில் உரிமம் பெற வேண்டும்

image

சென்னையில் ஜூலை 10 முதல் தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடைசியாக 2018 ஆம் ஆண்டு தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 7ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற உள்ளது. மேலும் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் 3 மாதத்திற்குள் ஆன்லைன் மூலம் உரிமம் பெற வேண்டும் என்றார்.

News July 8, 2024

ரூ.4.07 லட்ச மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 25 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பில் அதிநவீன படிக்கும் கருவி (Modular Reading Device) மற்றும் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் எழுத்துகளை பெரிதாக்கி படிக்க உதவும் உருப்பெருக்கி (Magnifier) என மொத்தம் ரூ.4.07 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

News July 8, 2024

விக்கிரவாண்டி தொகுதி எப்போது உருவானது?

image

கடலூர் மற்றும் விழுப்புரம் ஒருங்கினைந்து தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோது விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி 1951ஆம் ஆண்டு உருவானது. பிறகு தொகுதி மறுசீரமைப்பு காரணமாக 1967 வளவனூர் தனி தொகுதியாக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டு வளவனூர் தொகுதி மறைந்து கண்டமங்கலம் தனி தொகுதியானது. பிறகு மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு காரணமாக 2011ஆம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியானது.

error: Content is protected !!