India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், கணிக்கர் இன மக்களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடினர். அரியலூர் மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி மற்றும் பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் முத்துவேல், சமூக ஊடக பிரிவு துணைத் தலைவர் கதா.சரவணன் மற்றும் கணிக்கர் இன மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு, பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டனர். மேலும் இந்நிகழ்வில் அனைவருக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

(15.01.2026) கன்னியாகுமரி மாவட்ட இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

சென்னை மாநகராட்சி சார்பில் விக்டோரியா பொது மண்டபத்தில் ஸ்கெட்ச் வாக் மற்றும் போட்டோ வாக் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஸ்கெட்ச் வாக் நிகழ்ச்சி ஜனவரி 16 மாலை 6 மணிக்கும், ஜனவரி 17 காலை 7 மணி முதல் 8:30 மணி வரையிலும் நடைபெறும். ஜனவரி 18 அன்று காலை 7 மணி மற்றும் மாலை 5:30 மணி அளவில் போட்டோ வாக் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (15.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி வரும் ஜனவரி 18 தேதி நெல்லையிலிருந்து தாம்பரம் சிறப்பு ரயிலில் கூடுதலாக இரண்டு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இப்பெட்டிகளினால் 10 ஸ்லீப்பர் கோச், 8 முன்பதிவில்லா பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான கோச் உள்ளது. கூடுதல் பெட்டிகளினால் கூடுதல் இடங்கள் உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட (PRM) பயணிகளின் வசதிக்காகச் சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய நுழைவாயிலில் இதற்கான பிரத்யேக பார்க்கிங் பாஸைப் பெற்றுக்கொள்வதன் மூலம், வருகை மற்றும் புறப்பாடு ஆகிய இரண்டு பகுதிகளிலும் வழக்கமான 10 நிமிட இலவச நேரத்துடன் கூடுதலாக 5 நிமிடங்கள் அனுமதிக்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று ஜனவரி. 15 நாமக்கல்-(சக்திவேல் -9498168613) ,வேலூர் -(சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -( சின்னப்பன் – 949816909), பள்ளிபாளையம் -(வெங்கடாசலம் – 9498169150) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில், இன்று 15.01.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவு நேர காவல் ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்ற செயல்களை தடுக்கவும், சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாக தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். இன்று (ஜன.15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.