Tamilnadu

News January 22, 2026

சிவகங்கையில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில், வரும் 26.1.2026 குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. அவ்வூராட்சியில் குடியரசு தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதிக்கவுள்ளனர். இக்கூட்டதத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

கிருஷ்ணகிரி: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

கிருஷ்ணகிரி அடுத்த அம்பேத்கர் நகரை சேர்ந்த மாணவி ஷாலினி (19). இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்க விருப்பமில்லை என கூறப்படும் நிலையில் நேற்று (ஜன.21) வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 22, 2026

தனிச் சின்னத்தில் போட்டி – ஜி.கே.வாசன்

image

சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், பாஜக தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், 20ம் தேதி சென்னைக்கு வருகை தந்தார். அவரை, ‘NDA’ கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். அதன்படி, நுங்கம்பாக்கத்தில் தங்கியிருக்கும் பியூஷ் கோயலை, தமாக தலைவர் ஜி.கே.வாசன் இன்று சந்தித்தார். பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரும் தேர்தலில் தமாக தனிச் சின்னத்தில் போட்டியிடும்” என்றார்.

News January 22, 2026

திருச்சி: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் ஜன.24ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்வில், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிக்கு அழைப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘இது நம்ம ஆட்டம் 2026’ல் கலந்து கொள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் பங்கு பெற ஆன்லைன் மூலம் பதிவு செய்ய நாளை (ஜன. 23) கடைசி நாள். தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதளம் http://cmyouthfestival.sdat.in, www.sdat.tn.gov.in இணையத்தில் பதிவு செய்யலாம்.

News January 22, 2026

வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் முகாம்

image

பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைய வேண்டும். மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். இவற்றிற்காக சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் ஜன.24 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் வைத்து நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

திருச்சி: தொழில் முனைவோர் பயிற்சிகள் அறிவிப்பு

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சிகள், திறன் வளர்ப்பு பயிற்சிகள், மதிப்பு கூட்டல் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட உள்ளது. இது குறித்த விவரங்களுக்கு திருச்சி மாவட்ட திட்ட மேலாளர் கார்த்திகேயன் (8610687193) என்பவரை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

திருச்சி: பயணிகள் ரயில் ஒருநாள் ரத்து

image

ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து காலை 8:05 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரும், ஈரோடு – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில், வரும் ஜன.27ஆம் தேதி ஒரு நாள் மட்டும், கரூர் – திருச்சிராப்பள்ளி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து, கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

கிருஷ்ணகிரி: கூலி தொழிலாளி மரணத்தில் மர்மம்!

image

ஓசூர் அடுத்த பத்தளப்பள்ளி காய்கறி சந்தையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருபவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராமன்னா (45). இவர் நேற்று (ஜன.21) இரவு சந்தையில் கடையின் முன்பு தூங்கியுள்ளார். ஆனால் இன்று காலை (ஜன.22) இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 22, 2026

கிருஷ்ணகிரி: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

image

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடல் உங்க வீட்டில் இருந்தே CHOOSE பண்ணி வாங்கலாம். இதுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதும். மானியம் இல்லையா உடனே 9319019073 CALL பண்ணுங்க. SHARE பண்ணுங்க

error: Content is protected !!
↑