India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மாவட்டத்தில் இன்று (24.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 1-ஆம் தேதி மதுரை – பழனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06145/46) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் அன்று காலை 6 மணிக்கு மதுரையில் புறப்பட்டு 8:30-க்கு பழனி வந்தடையும். மீண்டும் மதியம் 2:25-க்கு பழனியிலிருந்து கிளம்பி மாலை 5 மணிக்கு மதுரையைச் சென்றடையும். இந்த அறிவிப்பு பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஜிஹானா இன்று காலை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலையிலுள்ள 1300 படிக்கட்டுகளிலும் ஒவ்வொரு படிக்கட்டிலும் யோகாசனம் செய்தபடி மலையேறினார். மாணவியின் இந்த முயற்சியைப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (24.01.2026) இரவு முழுவதும் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. அவசர தேவைகளுக்கு காவல்துறையின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

திருவள்ளூர் ஆட்சியர் மு.பிரதாப் திருவள்ளூரில் அடுத்த ஈகட்டில் உள்ள டி.ஆர்.பி.சி.சி.சி. மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை இன்று (ஜன.24) ஆம் தேதி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுடன் அமர்ந்து பள்ளி வகுப்பினை பார்வையிட்டார்.

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, இன்று (ஜன.24) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகரில் இன்று (ஜன.24) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜன-26 தேதி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் செய்ய வேண்டும் எனவும், கிராம மக்கள் கலந்து கொள்ள வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஜனவரி 29 முதல் 3 நாட்கள் அழகுக்கலை பயிற்சி நடைபெறுகிறது. பேகம்பூர் ‘ஜஸ்ட் பார் யூ’ (Just For You) அகாடமியில் நடக்கும் இப்பயிற்சியில் சான்றிதழ், மானியக் கடன் முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட திட்ட மேலாளர் சையது அப்துல் காதர் தெரிவித்துள்ளார். முன்பதிவிற்கு 9487614828 என்ற எண்ணை அணுகலாம் அல்லது <

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்
Sorry, no posts matched your criteria.