Tamilnadu

News February 4, 2026

உங்கள் கருத்து சேலத்தின் எதிர்காலம்: கலெக்டர் அழைப்பு

image

சேலம் மாவட்டத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான ‘தொலைநோக்கு 2030’ திட்டக் கலந்தாய்வுக் கூட்டம், வரும் 05.02.2026 அன்று காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

News February 4, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்-03) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

புகார்களைத் தீர்க்க ‘சிட்டிசன் 360’ புதிய இணையதளம் அறிமுகம்

image

சென்னை மாநகராட்சி ரூ.3.49 கோடி மதிப்பீட்டில் ‘சிட்டிசன் 360’ என்ற புதிய ஒருங்கிணைந்த இணையதளத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள், வரிகள், உரிமங்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் ஒரே தளத்தில் கொண்டு வரப்படும். புகார்களுக்கு விரைவான தீர்வு காணவும், நிர்வாக நடவடிக்கைகளை எளிதாகக் கண்காணிக்கவும் இது உதவும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரி : இரவு ரோந்து பணி காவல் ஆய்வாளர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் இன்று (பிப்- 3) இரவு முதல் நாளை (பிப்- 4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 4, 2026

என் ஊர் என் கனவு” திட்டத்தினை துவக்கி வைத்த அமைச்சர்

image

இன்று (பிப்.03)காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், “என் ஊர் என் கனவு” திட்டத்தினை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார். “மாவட்ட தொலைநோக்கு 2030″ உத்தி மற்றும் செயல் திட்டத்தை சமர்ப்பித்த பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களை பாராட்டி, நினைவு பரிசு வழங்கினார். உடன் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இருந்தனர்.

News February 4, 2026

காஞ்சியில் நல வாரிய உறுப்பினருக்கு அடையாள அட்டை

image

இன்று (பிப்.03) காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டரங்கில் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய தலைவர் விஜிலா சத்தியானந்த் பயனாளிகளுக்கு நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கினார்.

News February 4, 2026

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை ஆட்சியர் சதீஷ் ஆய்வு

image

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து, முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ரெ.சதீஸ், இன்று (பிப்.3) மாலை 4 மணி அளவில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் .சி.க.ஜெயதேவ்ராஜ், நகராட்சி ஆணையாளர் சேகர், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News February 4, 2026

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (பிப்.03) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!
↑