Tamilnadu

News April 20, 2025

காஞ்சியில் இருக்கும் அதிசய கோயில்

image

உடல் நலக்குறைவு உள்ளவர்கள், ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து வணங்கி சென்றால், நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. காஞ்சிபுரம் கம்பள தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் கோயில், பெரும்பாலானோருக்கு அறியப்படாத கோயிலாகவே இருந்து வருகிறது. பல்லவ மன்னர் ராஜசிம்மனால் இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டது. கோயில் சுவர் முழுவதும், சிற்பங்கள் நிறைந்து காணப்படும். ஷேர் பண்ணுங்க

News April 20, 2025

சிறுவாபுரி பால சுப்ரமணியர் கோயில்

image

சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என விரும்புபவர்கள் செவ்வாய்கிழமையில் சிறுவாபுரி முருகன் கோயிலில் வேண்டிக் கொண்டால், அடுத்த ஆண்டு அதே நேரத்திற்குள் அவர்களுக்கு சொந்த வீடு கட்டி முடிக்கும் யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பலரின் சொந்த வீடு கனவை இந்த முருகன் நிறைவேற்றி வைத்துள்ளார். இன்றும் நிறைவேற்றி வைத்து வருவதால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஷேர் பண்ணுங்க

News April 20, 2025

தலைமன்னார் தனுஷ்கோடி வரை நீந்தி கடந்த மாற்றுத்திறனாளி பெண்

image

இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை மாற்றுத்திறனாளி பெண் உட்பட 10 நீந்தி கடந்து வந்தனர். மும்பையை சேர்ந்த ஷஸ்ருதி மற்றும் பாலா கணேஷ் இருவரும் மாற்றுத்திறனாளிகள் நேற்று முன்தினம் காலை தலைமன்னார் கடலில் குதித்து நீந்த துவங்கினர். அவர்களுடன் 8 வீரர்களும் நீந்த துவங்கினர்.‌ இதில் மாற்றுத்திறனாளி ஷஸ்ருதி 11 மணிநேரமும், பாலா கணேஷ் 10:30 மணிநேரமும் நீந்தி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தனர்.

News April 20, 2025

கோவையில் யானை தாக்கி முதியவர் பலி!

image

கோவை, காளம்பாளையம், தாயனூர் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(60). இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, பின் மாலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, புதர் மறைவில் மறைந்திருந்த குட்டியுடன் கூடிய ஒற்றை காட்டு யானை தாக்கியதில் அவர் பலியானார். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2025

பித்தளை அண்டா ஏற்படுத்திய ரகளை: 7 பேர் மீது வழக்கு!

image

குளித்தலை அருகே கே.பேட்டையை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் கிருபானந்தன் பட்டவர்த்தியில் உள்ள தனது நண்பர் தாமு வீட்டில் பித்தளை அண்டா திருடி சென்றதாக அப்பகுதியை சேர்ந்தோர் சரமாரியாக அடித்து தாக்கி அவரிடம் இருந்த செல்போன், பைக்கை பறித்துச் சென்றுள்ளனர். சாந்தி புகாரில் செல்வா, சேது, கௌதம், அழகேசன், கோபால், துரைப்பாண்டி, விக்னேஷ் ஆகிய 7 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 20, 2025

பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோயில்

image

‘அறுபடை வீடு’ சன்னதிகளில் குடி கொண்டிருக்கும் முருகனை இந்த ஒரே கோயிலில் நம் தரிசிக்கலாம். ஒவ்வொரு சுவாமிக்கும் தனி சன்னதி உள்ளது. இந்த கோயில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாக்ஷேத்ரா காலனியில் உள்ளது. ஆறுபடை வீடுகளில் இருந்தும் புனிதத்தன்மை எடுத்து வரப்பட்டு, இங்கு ஒரே இடத்தில் தனித்தனி கோயில்களாக கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆறுபடை முருகனை வழிபட்ட பலனை பெற முடியும். ஷேர் பண்ணுங்க

News April 20, 2025

செங்கையில் 10 அவதாரங்களில் காட்சியளிக்கும் பெருமாள்

image

பெருமாளின் 10 அவதாரங்களை ஒருங்கிணைத்து ஒரே சிலையாக செங்கல்பட்டு திருவடி சூலத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. பெருமாள் இங்கு மச்சம், கூர்மம், வராகம், பரசுராமர், ஸ்ரீ ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என அனைத்து அவதாரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூன்று முகங்கள், 20 கரங்களுடன் பிரம்மாண்டமாக சிலை காணப்படுகிறது. மூலவராக, திருப்பதியில் உள்ளது போன்று, வெங்கடேச பெருமாளாக எழுந்தருளியுள்ளார். ஷேர்

News April 20, 2025

நாமாக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆர்டிஓக்கள் தலைமையில், வருகிற 22-ம் தேதி நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 20, 2025

ஐபிஎல் சூதாட்டம்: தோல்வியால் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு!

image

சேலம் மாவட்டம் அமானி கொண்டலாம்பட்டி தானங்காடு பகுதியைச் சேர்ந்த தறித்தொழிலாளி கார்த்திக் என்பவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஒரு குறிப்பிட்ட அணி வெற்றி பெறும் என்று ரூ.50,000 பந்தயம் கட்டியுள்ளார். அவர் கட்டிய அணி தோல்வியடைந்ததால் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2025

எந்த கிழமையில் கிரிவலம் சென்றால் என்ன பலன்?

image

▶ஞாயிறு – சிவலோக பதவி கிடைக்கும், நோய்கள் நீங்கும்
▶திங்கள் – பாவ கணக்கு குறைந்து, புண்ணிய கணக்கு மேலோங்கும்
▶செவ்வாய் – கடன் தீரும், தீவினைகள் போகும், வறுமை நீங்கும்
▶புதன் – கலைகளில் நல்ல வளர்ச்சி, மோட்சம் கிடைக்கும்
▶வியாழன் – குரு அருள் கிடைக்கும். ஞான சித்தி ஏற்படும்
▶வெள்ளி – செல்வ நலன் கிடைக்கும், குழந்தை பேறு கிடைக்கும்
▶சனி – பிறவிப் பிணி போகும். வியாபாரத்தில் உச்ச நிலை ஏற்படும்

error: Content is protected !!