India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை அரசு மருத்துவமனையில் தமிழக அளவில் முதல் முறையாக நோயாளிகளின் பதிவு மற்றும் சிகிச்சை விபரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு தனி செயலி மூலம் அவர்களுக்கு விவரங்களை தெரிவிக்கும் ஹெச் எம் ஐ எஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் தாங்கள் ஏற்கனவே எடுத்த சிகிச்சை விபரங்களை அடுத்து வரும் நாட்களில் காட்டி மேல் சிகிச்சை பெற முடியும். *எல்லாரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் பிரவீன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று பிரவீன் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை மற்றும் 25000 அபராதம் விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
விழுப்புரம் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ – மாணவிகள் நேற்று (ஆக.19) மயிலாடுதுறையில் 300 பேர் பங்கேற்ற மாநில அளவிலான 8 – 16 வயதானோருக்கான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றிப்பெற்றனர். மாணவ – மாணவியரின் வெற்றியை எம்.எல்.ஏ லட்சுமணன் அழைத்து பாரட்டு தெரிவித்தார்.
ராமநாதபுரம் இளைஞர்களே, அரசு (TAHDCO) சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தற்போது போர்க்லிப்ட் ஆபரேட்டர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. 18 முதல் 35 வயது வரை உள்ள 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். https://tahdco.com/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, உணவு இலவசமாக வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.
தென்காசி மாவட்ட இஎஸ்ஐ குறைதீர் கூட்டம் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் வருகிற 28ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்ட இ எஸ் ஐ மற்றும் பி எப் சார்ந்த உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவோர் தொழில் அதிபர்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் தொழில் நிறுவன அமைப்புகள் பங்கேற்று குறைகளை நிவர்த்தி செய்யலாம் என மண்டல ஆணையாளர் சிவ சண்முகம் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
புதுச்சேரி மரப்பாலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் புதிய மின் பாதை, நகர மின் பாதைகளில் இன்று (ஆக.20) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 9:30 மணி முதல் மதியம் 1:45 மணி வரை சுழற்சி முறையிலும், அதேபோல, வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் முத்தியால்பேட்டை மின் பாதையில் காலை 10:30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோயில் புராண சிறப்புகளை கொண்டது. நம்மாழ்வார் அவதாரம் செய்த புண்ணிய பூமி ஆகும். நவ திருப்பதிகளில் சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீரங்கம் போல இங்கு அரையர் சேவை நடைபெறும். அமாவாசை மட்டுமல்லாது அனைத்து நாட்களிலும் முன்னோர்களுக்கு திதி அளிக்கப்படும். இதனால் முன்னோர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்பது ஐதீகம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
நாமக்கல் மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சியை 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கபடவுள்ளது. பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு சான்றிதழுடன், தங்கும் வசதி மற்றும் உணவும் வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்துதரப்படும். இங்கே <
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <
Sorry, no posts matched your criteria.