Tamilnadu

News August 20, 2025

காட்டாங்கொளத்துார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

தாம்பரம் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த வெடிகுண்டு அழைப்பில், மறைமலை நகர் காட்டாங்கொளத்தூரில் உள்ள JRK பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளித் தேர்வுக்குப் படிக்காததால் விடுமுறை வேண்டும் என்பதற்காக, அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் இந்த மிரட்டல் அழைப்பை விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த மாணவருக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

News August 20, 2025

காஞ்சிபுரத்தில் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடங்கள்!

image

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களை இங்கு காணலாம். ▶️அறிஞர் அண்ணா இல்லம் ▶️ஏகாம்பரேஸ்வரர் கோயில் ▶️கைலாசநாதர் கோயில் ▶️குன்றத்தூர் முருகன் கோயில் ▶️காஞ்சிபுரம் ஜமா மஸ்ஜித் ▶️வல்லக்கோட்டை முருகன் கோயில் ▶️உத்திரமேரூர் வைகுந்த பெருமாள் கோயில். காஞ்சியில் உள்ள சுற்றுலாத் தளங்களை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க. காஞ்சியில் பேமஸ்னு நினைக்கிற இடங்களை கமெண்டில் சொல்லுங்க!

News August 20, 2025

கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ரங்கமன்னார் 

image

ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்க மன்னார் எழுந்தருளுவது  வழக்கம். இந்நிலையில் ஆவணி மாத ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

News August 20, 2025

கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆக.22 காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. எட்டாம் வகுப்பு பட்டப்படிப்பு ஐடிஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கு மேற்பட்ட கம்பெனிகள் பங்கேற்க உள்ளன. விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த எண்ணில் 04343-291983 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

News August 20, 2025

சிவகங்கை: உயர்வுக்கு படி முகாம் தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம் 2024-25ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற, தேர்ச்சி / தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மொத்தம் 1,292 மாணவர்கள் பயன்பெறும் வகையில், வரும் 22.8.2025 அன்று சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்டரங்கில், “உயர்வுக்குப்படி முகாம்-2025” நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

கிருஷ்ணகிரியில் நாளை மின் தடை

image

கிருஷ்ணகிரி நகர், தொழிற்பேட்டை, பவர் ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஐக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி-1, வீட்டு வசதி வாரியம் பகுதி-2 பழையபேட்டை, குண்டலபட்டி, சுத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி ஆகிய இடங்களில் நாளை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

கரூர்: ரூ.64,480 சம்பளத்தில் வேலை!

image

கரூர் மக்களே, பட்டப்படிப்பு முடித்தவரா நீங்கள்..? வேலை தேடிக்கொண்டு இருக்கிறீர்களா..? உங்களுக்காக ரெப்கோ வங்கியில் (Repco Bank) 30 வாடிக்கையாளர் சேவை அதிகாரி/ கிளார்க் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும். வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

News August 20, 2025

நீலகிரி: இலவச பயிற்சியுடன் வேலைவாய்ப்பு!

image

நீலகிரி மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சி 3 மாதம் வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியினை முழுமையாக முடிப்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 20, 2025

சேலம்: டிகிரி போதும்.. ரூ.64,000 சம்பளத்தில் வேலை!

image

சேலம் மக்களே, SBI வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில் உள்ள, 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 26.08.2025 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

News August 20, 2025

தருமபுரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தருமபுரியில் நாளை (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ளது. தருமபுரியில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபம், கடத்தூரில் உள்ள மீனாட்சி மஹால், பென்னாகரத்தில் உள்ள பிக்கிலி 4 சாலை திறந்தவெளி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தடங்கம், பாலக்கோடு விபிஆர்சி கட்டிடம் கமலாம் பட்டி மற்றும் அரூரில் உள்ள அண்ணமார் திருமண மண்டபம் ஆகிய ஆறு இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ஷேர்!

error: Content is protected !!