Tamilnadu

News March 16, 2024

திருச்சி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

image

திருச்சி விமான நிலையம் இன்று வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் உற்சாக வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டனர் முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 16, 2024

புளியந்தோப்பு: ரூ.8.84 கோடியில் சிறுவர் பூங்கா

image

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் ஊராட்சி புளியந்தோப்பு பகுதியில் நீர்வளத்துறை சார்பில், சமுத்திரம் ஏரியில் ரூ.8.84 கோடி மதிப்பில் புதிதாக சிறுவர் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இதனை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (16.03.2024) திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் , சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

News March 16, 2024

நாகர்கோவில் மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள்

image

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 33வது வார்டுக்குட்பட்ட தொழிலாளர் நல அலுவலக வளாகத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைத்தல் மற்றும் தொல்லவிளை பாரதியார் தெருவில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைத்தல் ஆகிய பணிகள் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News March 16, 2024

அரக்கோணம் அருகே மோப்ப நாய்களுக்கு பயிற்சி

image

அரக்கோணம் அடுத்த தக்கோலம் நகரி குப்பத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மையம் இயங்கி வருகிறது. இங்கு கட்டட இடிபாடுகளில் சிக்குபவர்களை மீட்பதற்கு 10 மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோப்ப நாய்களின் மோப்ப பயிற்சி மற்றும் அடிப்படை செயல்திறன் பயிற்சி இன்று நடைபெற்றது. கமாண்டன்ட் சைலேந்திரசிங், துணை கமாண்டன்ட் கோரக்சிங் ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News March 16, 2024

கோபி அருகே தார் சாலை பணிக்கு பூமி பூஜை

image

கோபி தொகுதிக்கு உட்பட்ட கோட்டுபுள்ளம்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16 லட்சம் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். உடன் யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் அனுராதா, ஊராட்சி தலைவர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News March 16, 2024

பெரம்பலூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு

image

பெரம்பலூர் அடுத்த எளம்பலூர், கவுல்பாளையம் ஆலாம்பாடி, நொச்சியம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் இருந்து ஒரு சில பகுதிகளை பெரம்பலூரில் இணைத்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று(மார்ச் 15) எளம்பலூர் ஊராட்சி தலைவர் சித்ராதேவி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

News March 16, 2024

காஞ்சிபுரம்: 100% வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பதை வலியுறுத்தி இன்று(16.03.2024)  விழிப்புணர்வு எடுத்துக்கொண்டனர். மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கலைச்செல்வி மோகன் தலைமையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

News March 16, 2024

சேலம் அருகே சாலை மறியல்

image

சேலம் மாவட்டம் இடங்கண சாலை நகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஒரு மாதமாக காவிரி குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த மக்கள் இன்று இளம்பிள்ளை – சின்னப்பம்பட்டி பகுதியான பாப்பாபட்டி பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

News March 16, 2024

தி.மலை: மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா

image

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் A.A.ஆறுமுகம் இன்று (16.03.2024) வழங்கினார். இந்நிகழ்வில், பள்ளித் தலைமை ஆசிரியை பா.ஜெயக்குமாரி, உதவி தலைமை ஆசிரியர் மு. சண்முகம் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News March 16, 2024

கடலூரில் அரிசி விலை கிடு., கிடு உயர்வு!

image

கடலூரில் கடந்த சில நாட்களாக காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதேபோல் மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வரத்து குறைந்ததுதான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடலூரில் கடந்த மாதம் ரூ.52-க்கு விற்ற ஒரு கிலோ பொன்னி புழுங்கல் தற்போது 60-க்கு விற்கப்படுகிறது.