India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுகை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் வரும் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சித்திரை திருவிழா மெகா ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பெயர், முகவரி, செல்போன் எண் திருத்தம் செய்து கொள்ளலாம். பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை மாவட்டத்திலுள்ள 31 துணை அஞ்சலகங்களில் நன்கு பயன்படுத்திக் கொள்ள கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 415 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலையிலும் கறிக்கோழி விலையில் ரூ.7 உயர்த்தி ரூ. 96 க்கும் நிர்ணயம் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் இன்று ஏப்ரல் 13-ஆம் தேதி, காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் மிதப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் விவசாய கிணற்றில் மிதக்கும் வாலிபர் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மற்றும் விவேஷியல் அகாடமி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தாட்கோ மாவட்ட தாட்கோ அலுவலகத்தை அணுகவும். (SHARE பண்ணுங்க)
திருப்பத்தூர், கரம்பூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (27). இவர் மின்சார வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நாராயணபுரத்தில் மின்மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெங்கடேசன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வராததால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம், ஆயக்குடி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் தளமான பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குழந்தை வரம் வேண்டி விரதம் மேற்கொள்பவர்கள் அங்குள்ள அனுமன் நதி கரையில் படி பாயாசம் சாப்பிட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இதற்காக பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்வது வழக்கம்.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது, ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். 2025ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2025 அன்று நடைபெறும் சுதந்திர தினத்தன்று முதல்வரால் பரிசு வழங்கப்படும் என்றார்.
தஞ்சாவூர் கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆதார் மற்றும் சர்வதேச தபால் சேவை சிறப்பு முகாம் வருகிற 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்தந்த கோட்டத்தில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதார் அட்டை திருத்தம், பெயர் மாற்றம், தொலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு கலெக்டர் தலைமையில், சமூக பொறுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் என எல்லாவற்றிக்கும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் எனவும் தமிழில் பெயர் பலகைகள் மே மாதம் 15ம் தேதிக்குள் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
புழல் கதிர்வேடு பகுதியில், குஜராத்தை சேர்ந்த சஞ்சித் என்பவருக்கு சொந்தமான மர கிடங்கு உள்ளது.கதிர்வேடு விநாயகர் கோவில் தெருவில் வசிக்கும் ராஜேஷ் என்கிற ஜான், 33.நேற்று மதியம், லாரியில் இருந்து கிரேன் வாயிலாக மரங்களை இறக்கும் போது திடீரென கிரேனில் இருந்த மரம் ஜான் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் தலை நசுங்கி பலியானார்.புழல் போலீசார் உடலை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.