Tamilnadu

News April 12, 2025

குரூப் 1 இலவச பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் குரூப் 1 மற்றும் யுஎஸ்ஆர்பி, எஸ்.ஐ. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ளவர்கள் ஏப்.15ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9499055904 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துகொள்ளலாம். பயனுள்ளவர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.

News April 12, 2025

கன்னியாகுமரியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

image

கன்னியாகுமரியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் சில்லறை விற்பனை கூட்டாளர், சூப்பர்வைசர் உள்ளிட்ட 65 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்பட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 12, 2025

நாகை அங்கன்வாடி மையத்தில் காலி பணியிடங்கள்

image

நாகை மாவட்டத்தில் 20 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 12 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் காலி பணியிடங்களாக உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் வருகிற 7ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை உடனே வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

News April 12, 2025

நாய் கடித்து சிகிச்சை பெற்ற சிறுவன் பலி

image

ஒரகடம், வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர், 38. இவரது மகன் விஷ்வா(13), 8ஆம் வகுப்பு மாணவரான இவரைக் கடந்த 7 ம் தேதி மதியம் அப்பகுதியில் உள்ள தெருநாய் வலது கையில் கடித்தது. ரெட்டிபாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, விஷ்வாவிற்கு தீவிர தலைவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து ஒரகடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 12, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் ஏப்.15ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாற்று திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை தேடுபவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் 9499055897, 9952493516 அழைக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News April 12, 2025

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு

image

நல்லகுட்லஅள்ளி பெரியண்ணன் தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச நேற்று சென்ற போது பாம்பை கண்டு பயந்து கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், சிகிச்சை பெற்ற பெரியண்ணன் உயிரிழந்தார். இது குறித்து கடத்தூர் காவலர்கள் வழக்குப்பதிவிட்டு விசாரித்து வருகின்றனர்.

News April 12, 2025

டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை

image

திருச்சியில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் GENERAL MANAGER பணியிடங்களை நிரப்பதமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.

News April 12, 2025

5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்

image

குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி, பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியான சுப்பிரமணி (63) அந்த சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி, அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

News April 12, 2025

கோவை: கால சம்ஹாரீஸ்வர பைரவர் கோயில்

image

கோவை, ஆலாந்துறை, நாதேகவுண்டன்புதூரில், கால சம்ஹாரீஸ்வர பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. 8 வாகனங்களில் 8 வகையான கால பைரவர்கள், சம்ஹார பைரவர்களாக இங்கு வீற்றிருக்கின்றனர். சக்திவாய்ந்த கால பைரவரை, அஷ்டமி நாட்களில், 11 தீபங்கள் ஏற்றி, வணங்கி வந்தால், கடன், வறுமை உள்ளிட்ட பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 12, 2025

வேலைவாய்ப்புடன் பயிற்சிக்கு அழைப்பு!

image

திருப்பூரில் பிரதமரின் இண்டன்ஷிப் திட்டத்தில், முன்னணி நிறுவனங்களில், ஊக்கத்தொகையுடன், கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 10ம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு, ஓராண்டு தொழில்பயிற்சி வழங்கி, நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது. இதற்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க வரும் 15ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கில்<<>> பதிவு செய்ய வேண்டும்.

error: Content is protected !!