India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 235 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.4100 – 24200 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க பழைய ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த நபர்கள் மீது 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (52) கடந்த பிப்ரவரி மாதம் இவரை போனில் தொடர்பு கொண்ட சிலர், மும்பை போலீஸ் என கூறி மிரட்டி, 50 லட்சம் ரூபாயை பறித்தனர். அதேபோல் சரத் (32) என்பவரிடம் பங்குச்சந்தை வழியாக அதிகம் சம்பாதிக்கலாம் என கூறி 1.97 லட்சம் ரூபாயை ஏமாற்றினர். இது குறித்து விசாரித்த தாம்பரம் சைபர் குற்றப்பிரிவு போலீசார் டில்லியைச் சேர்ந்த ராயிஸ் (25) மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.
நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பெருமாள்புரத்தில் வரும் 17-ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் மரு.இரா.சுகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முகாமில் கலந்து கொள்ள இங்கே <
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சி ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அரியலூர் மாவட்டத்தில் 18 அங்கன்வாடி பணியாளர்கள், 24 அங்கன்வாடி உதவியாளர்கள், 4 குறு அங்கன்வாடி பணியாளர்கள் என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் வருகிற 23ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை உடனே வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
தஞ்சையில் உள்ள தனியார் நிறுவனத்தில் Assistant Manager பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கே <
தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் குத்துக்கல் வலசையில் வரும் 17-ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முகாமில் கலந்து கொள்ள இங்கே <
ஓசூர் பேருந்து நிலையம் அருகில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஓசூர் போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு விசாரித்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் ஏதும் உடனடியாக தெரியவில்லை. பின்னர் அவரது உடல் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மயிலாடுதுறையில் குரூப் 1 மற்றும் யுஎஸ்ஆர்பி, எஸ்.ஐ. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ளவர்கள் ஏப்.15ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9499055904 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துகொள்ளலாம். பயனுள்ளவர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.
Sorry, no posts matched your criteria.