India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகையில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீன்பிடி தடைக்காலத்திற்கு முன் கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் ஏப்.14 இரவு 12 மணிக்குள் திரும்ப வேண்டுமென நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவுறுத்தியுள்ளார். இந்த தகவலை உங்க மீனவ நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…
திருவள்ளூரில் வெவ்வேறு இடங்களில் ரயிலில் அடிபட்டு 3 பேர் பலியாகினர். நேற்று திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே 35 வயதுள்ள ஆண் ஒருவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். புட்லூர் – செவ்வாய்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்த 35 வயதுள்ள ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு பலியானார். மேலும் செவ்வாய்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர், தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் மக்களுக்கான முற்போக்கு பாடல்களை பாடித்திரிந்த கரிசல் குயில் கிருஷ்ணசாமி நேற்று (ஏப்-11) காலமானார். தனது இனிமையான குரல் வளத்தால் தமிழகத்தின் பட்டித் தொட்டி எங்கும் கரிசல் குயில் இசைக்குழுவை கொண்டு சென்றவர். அவருடைய மறைவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் எழுத்தாளர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலை திடீரென்று சூறைக் காற்றுடன் விடாமல் கனமழை கொட்டித்தீா்த்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டோடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்தன. மேலும், விளம்பர பதாகைகள் சாலையில் தூக்கி வீசப்பட்டன.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியின் பெற்றோர் வெளியூருக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் சரவணன் (47) என்பவர் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்குள் நுழைந்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பெற்றோர் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடியாத்தம் அடுத்த சைனகுண்டாவை சேர்ந்தவர் லித்திகா (11). இவர் அதே பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பள்ளிக்கு செல்லவில்லை. காய்ச்சல் அதிகமானதால் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அன்னசாகரம் பகுதியில் வீற்றிருக்கும் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சிவசுப்பிரமணிய சுவாமியின் திருத்தேரினை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்கும், சிறப்பு விழா வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனின் அருள் பெற்றனர்.
தேனியை சேர்ந்தவர் நரேந்திர பிரசாத் 28. டாக்டரான இவர் சென்னையில் பணி செய்கிறார். இவரிடம் முகநுாலில் ஈரோட்டை சேர்ந்த நந்தினி என்பர் பழகினர். பின்பு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். நந்தினி சமூக வலைதளங்களில் பல ஆண்களுடன் பேசினார். இதனை தட்டி கேட்ட நரேந்திர பிரசாத்தை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். மேலும் ரூ.9.69 லட்சம் வரை மிரட்டி வாங்கியுள்ளா். நந்தினி உட்பட 4 பேர் மீது வழக்கு
ஆவடி மணலி, சாலமன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (32). ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று மதியம், அவரது ஆட்டோவில் நண்பர்களான சுகுமார், சூர்யா, வேல்முருகன் ஆகியோருடன் ஆவடி கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். மாலை 4:55 மணியளவில் அங்கு அனைவரும் குளித்து கொண்டிருந்தபோது திடீரென கார்த்திக் மாயமானார். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் கார்த்திக் உடலை மீட்டனர். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலை திடீரென்று சூறைக் காற்று வீச தொடங்கி, பின்னர் 2 மணி நேரம் விடாமல் கனமழை கொட்டித்தீா்த்தது. இதனால் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் குடை பிடித்தபடியே சென்றனர். கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.