Tamilnadu

News April 12, 2025

கடலூர்: 978 நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

image

கடலூர் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு பலவித இடர்பாடுகள் நேரிடுகிறது. இதை தடுக்க கடந்த டிசம்பர் 2024இல் 194 நாய்களுக்கும், 2025ஆம் ஆண்டில் இதுவரை 511 பெண் நாய்களும், 467 ஆண் நாய்களும் என மொத்தம் 978 நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News April 12, 2025

தி.மலை மாவட்டத்தில் 427 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு 

image

தி.மலை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 427 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க https://tiruvannamalai.nic.in இணையதளத்தில் மாதிரி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். குறிப்பு: 30.04.2025 அன்றே விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள். ஷேர் பண்ணுங்க.

News April 12, 2025

பாஜக மாநிலத் தலைவரானார் நயினார் நாகேந்திரன்

image

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பாஜக தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்த நிலையில் இவருக்கு மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்ய கட்சி தலைமை அனுமதி வழங்கியது. இதன் மூலம் தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவரானார் நயினார் நாகேந்திரன். அதற்கான சான்றிதழை கட்சி அவருக்கு வழங்கியது.

News April 12, 2025

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தென்காசியில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும், தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகள் தங்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மே.10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News April 12, 2025

நீலகிரி: காவல்துறையினர் எச்சரிக்கை!

image

நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டமாக திகழ்ந்து வருவதால், நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளும், சுற்றுலா வாகனங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், உள்ளுரில் உள்ள வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகரித்த நிலையில், குன்னூரில் அனுமதியற்ற சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து, பறிமுதல் செய்யப்படும் என்று நீலகிரி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News April 12, 2025

நகராட்சியுடன் இணைப்பதை கைவிட அரசுக்கு பரிந்துரை

image

ஈரோடு, கோபி, பவானி நகராட்சிகளுடன் பஞ்சாயத்துகளை இணைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை அரசுக்கு அறிக்கையாக அனுப்பி உள்ளனர், மாவட்ட அதிகாரிகள். அதன்படி ஈரோடு மாநகராட்சி, கோபி, புன்செய்புளியம்பட்டி, பவானி நகராட்சியுடன் கதிரம்பட்டி, மேட்டுநாசுவம்பாளையம், வெள்ளாளபாளையம், மொடச்சூர், குள்ளம்பாளையம்,நொச்சிகுட்டை, நல்லூர், குருப்பநாய்க்கன்பாளையம் பஞ்.களை இணைக்கும் முடிவை கைவிட பரிந்துரையாக அனுப்பி உள்ளனர்

News April 12, 2025

கடன் தொல்லையை நீக்கும் கங்காதீசுவரர்

image

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி மிக விஷேசம். சென்னை புரசைவாக்கத்தில் பிரசித்திபெற்ற கங்காதீசுவரர் கோயில் உள்ளது. இங்கு வந்து தீபம் ஏற்றி வழிபட்டால் EMI உள்ளிட்ட அனைத்து கடன் தொல்லைளும் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பியாக உள்ளது. மேலும், இறைவனை மனதார வேண்டினால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். கடன் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 12, 2025

மணிமேகலை விருது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம, ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவைகளில் இருந்து மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9444094357 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News April 12, 2025

மயிலாடுதுறை: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

News April 12, 2025

கோவை: 5 முகம், 8 கரங்கள் கொண்ட முருகன் கோயில்!

image

கோவை: அன்னூர் அருகே இரும்பொறையிலிருந்து 4 கி.மீ தொலைவில் ஓதிமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயில் பழநி மலையை விடவும் பழமையானதாகும். ஓதிமலை முருகன் 5 தலையுடனும் 8 கைகளுடனும் காட்சி தருகிறார். பொதுவாக, அனைத்துக் கோயில்களிலும் மூலவர் சிலை பீடத்தின் மீதே நிறுவப்பட்டிருக்கும். ஆனால், இக்கோயில் மூலவர் முருகன் சிலை பாறையின் மீது நிறுவப்பட்டிருருப்பது விசேஷம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

error: Content is protected !!