Tamilnadu

News March 25, 2026

நாகை: தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக!

image

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட வேதாரண்யம், கீழ்வேளூர், நாகை உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் நேற்று அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியான நிலையில், கீழ்வேளூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில், வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில், EPS மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென அவர் வாக்கு சேகரித்தார்.

News March 25, 2026

காஞ்சிபுரத்தில் இபிஎஸ் நியமித்தார்!

image

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளராக கே.யூ‌.எஸ்‌ சோமசுந்தரம் தொடர் மக்கள் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பரிந்துரையில் காஞ்சிபுரம் மாநகர மேற்கு பகுதி செயலாளராக அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்தார். அதற்கு கே.யூ.எஸ். சோமசுந்தரம் நன்றி தெரிவித்துள்ளார்.

News March 25, 2026

செங்கல்பட்டு அருகே விபத்து; 11 பேர் காயம்!

image

சித்தாமூர் அருகே போந்துார் கிராமத்திலிருந்து 10 பெண்களை ஏற்றிச் சென்ற தனியார் கம்பெனி வேன், ஓட்டுநரின் கவனக்குறைவால் பொலம்பாக்கம் அருகே பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சித்தாமூர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News March 25, 2026

திருப்பூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

திருப்பூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News March 25, 2026

திண்டிவனத்தில் கலெக்டர் ஆய்வு!

image

விழுப்புரம்: திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் முன்னிட்டு வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் ஷேக்.அப்துல்ரகுமான் இன்று மார்ச். 24 பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் சார் ஆட்சியர் ஆகாஷ், அரசு அதிகாரிகள் உட்பட பலர் இருந்தனர்.

News March 25, 2026

மதுரை: 9 பேர் கொலையில் இன்று தண்டனை அறிவிப்பு

image

சிந்தாமணி பகுதியில் 2012-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்று திரும்பிய வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்டனர். இதில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையின் போது 2 பேர் உயிரிழந்தனர். கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் நேற்று முன்தினம் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து தொடங்குகிறார் EPS!

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எப்ரல் 23 ம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிராச்சரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று (25.03.2026) மாலை 4 மணிக்கு சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.

error: Content is protected !!
↑