Tamilnadu

News March 26, 2026

தூத்துக்குடி: குளத்தில் சடலமாக மிதந்த சிறுவன்

image

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை சேர்ந்தவர் மதன் (17). இவர் நேற்று முந்தினம் வெளியே சென்றவர் நேற்று காலை வரை வீடு திரும்பாததால் பெற்றோர்கள் சிப்காட் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் தேடிய போது சில்வர்புரத்தில் உள்ள மாடங்குளத்தில் அவர் சடலமாக மிதப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவை: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

image

ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்தவர் ஷிவானி (14). இவர் தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தேர்வுக்கு படிக்காமல் செல்போனில் கேம் விளையாடியதால் அவரது தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஷிவானி வீட்டின் மாடி அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அறிவித்தார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்!

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாமக்கல் மாவட்ட மைதான நீச்சல் குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி ஏப்.1–ஜூன் 14 வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு அனைவரும் விண்ணப்பிக்கலாம். 12 நாள் கட்டணம் ₹1,200 + 18% ஜிஎஸ்டி சேர்த்து ₹1,416. கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும். 12 நாள் பயிற்சி 5 கட்டங்களாக நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அறிவித்தார் கரூர் மாவட்ட ஆட்சியர்!

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 ஐ முன்னிட்டு, 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான படிவம் 12 வழங்கப்பட்டு, ஒப்புதல் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 599 4403 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் அறிவித்துள்ளார்

News March 26, 2026

ஆரணியில் கட்டுக்கட்டாக பறிமுதல்!

image

ஆரணி, வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் அருகே தனியார் மில் பகுதியில் நேற்று வாகன சோதனை நடைபெற்றது . அப்போது தேர்தல் பறக்கும் படையினர், வேலூரில் இருந்து ஆரணி நோக்கி வந்த காரை சோதனை செய்ததில், எந்தவித ஆவணமும் இன்றி கட்டுக்கட்டாக கொண்டுவரப்பட்ட ரூபாய் 9.5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, ஆரணி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

News March 26, 2026

சேலத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!

image

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சேலத்தில் அமைதியை உறுதிப்படுத்தக் காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 58 ரவுடிகள் 6 மாத காலத்திற்கு ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை மீறி ஊருக்குள் நுழைந்தால் அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர். ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 26, 2026

சென்னை: உள்ளாடைக்குள் கோடி கணக்கில் நகை!

image

சென்னை பெரம்பூர் இரயில் நிலையத்தில் இரண்டு பேரிடம் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, அவர்கள் உள்ளாடைக்குள் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மறைத்து வைத்து எடுத்துவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தங்க நகைகளை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் அவற்றை கருவூலத்தில் ஒப்படைத்துவிட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!
↑