India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தாராபுரத்தைச் சேர்ந்த பழனியம்மாள் என்ற மூதாட்டி கும்பாபிஷேகத்திற்குச் செல்லப் பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், “நகையைப் பத்திரமாக மடித்துத் தருகிறேன்” எனக் கூறி, மூதாட்டியை ஏமாற்றி நகையைத் திருடிச் சென்றார். இது குறித்துத் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அருகே உள்ள சேலத்தம்பட்டி ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் அந்தப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகின்றது. ஏரிக்கரையில் குவியல் குவியலாக மீன்கள் கரை ஒதுங்கி உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். மேலும் ஏரியில் மாசு நீர் கலந்துள்ளதா அல்லது ஆக்சிஜன் குறைவால் மீன்கள் இறந்துள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னிமலை அருகே மது போதையில் கணவர் ஈஸ்வரன் அடிக்கடி தகராறு செய்ததால் மனவேதனையடைந்த மனைவி ரஞ்சிதா(47), கடந்த 15-ஆம் தேதி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளித்தலை பகுதியை சேர்ந்த மணிவேல் – வனிதா தம்பதியினர் மகள் ஹரிஷா (5). நேற்று பில்லுார் தோகைமலை சாலையில், ஹரிஷா பள்ளி செல்ல நின்று கொண்டிருந்ததார். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம், சாலையோரம் நின்ற குழந்தை மீது மோதியது. இதில் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே ஹரிஷா உயிரிழந்தார். தோகைமலை போலீசார், சிறுமியின் உடலை குளித்தலை GH-க்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் பாக்கியராஜை போலீசார் கைது செய்தனர்.

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் வரும் கட்சிகளின் தொகுதிகள் குறித்து நேற்று EPS அறிவித்தார். அதில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அந்தத் தொகுதியில் தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் ஆனந்தன் ஐயா சாமி பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இணையம் பகுதியை சேர்ந்தவ மரியதாசன் (61) நேற்று தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு அவரது வீட்டிற்கு திரும்பி வந்த நிலையில் மதிய உணவுக்காக அவரது மகள் வீட்டிற்கு செல்லவில்லை. சந்தேகமடைந்த மகள் அவரை பார்க்கச் சென்ற போது அவர் வீட்டில் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளம் வடபாதியை சேர்ந்தவர் பார்வதி(80). இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் 20 ஆண்டுகளாக தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கை மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நேற்று அவரது வீட்டில் விசம் குடித்து உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின்படி, நாகுடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல.

உத்தமபாளையம் அருகே கோம்பையை சேர்ந்த செல்வம் (25) கம்பம் கக்கன் ஜி காலனி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி தோட்ட வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டாரை இயக்க சென்ற போது செல்வம் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு GH-ல் சேர்த்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக் உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை: வாலாஜா நகர தேமுதிக பொருளாளர் எஸ்.கே பாபு தலைமையில் 25 பேர் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று (மார்ச் 25)அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது நகர அம்மா பேரவைத் தலைவரும் கவுன்சிலருமான டபிள்யூ.ஜி முரளி, அம்மா பேரவை செயலாளர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். தேர்தல் நேரத்தில் தேமுதிகவினர் அதிமுகவில் ஐக்கியமாவது பரபரப்பை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை: வாலாஜா நகர தேமுதிக பொருளாளர் எஸ்.கே பாபு தலைமையில் 25 பேர் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று (மார்ச் 25)அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது நகர அம்மா பேரவைத் தலைவரும் கவுன்சிலருமான டபிள்யூ.ஜி முரளி, அம்மா பேரவை செயலாளர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். தேர்தல் நேரத்தில் தேமுதிகவினர் அதிமுகவில் ஐக்கியமாவது பரபரப்பை ஏற்படுத்தியது.
Sorry, no posts matched your criteria.