India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் அமைந்துள்ள அருணோதயா தியேட்டரில் பறந்து போ படம் திரையிடப்பட்டது. இந்தநிலையில் ரசிகர்களிடம் திரைப்படத்தின் கருத்துக்களை கேட்க நடிகர் சிவா அங்கு வந்தார். மேலும் திரைப்படத்தை பார்த்த பொதுமக்களிடம் திரைப்படம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர் கூறுகையில், உலக அரசியலில் தான் ஈடுபடப் போவதாகவும், நானே அகில உலக சூப்பர் ஸ்டார் என்றும் நகைச்சுவையாக அவர் தெரிவித்தார்.
திருப்பெரும்புதூர் வட்டத்தில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் டாட் என்ஐசி டாட் இன் என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜரான சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மன்னிப்பு கோரினார். இதனையடுத்து ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது. நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை எனவும், நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பு ஏற்பதாகவும் ஆணையர் நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
புழல் பிரிட்டானியா நகர் திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நவீன் பொல்லினேனி (37) மூன்று வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார் அவர் 44.5 கோடி ரூபாய் கையாடல் செய்து விட்டதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக நிறுவன சட்ட ஆலோசகர்கள் கொளத்தூர் காவல் துணை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நவீன் நேற்று தூக்கிட்டு உயிரிழந்ததால் புழல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருவண்ணாமலையிலிருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூரிற்கு நேற்று (ஜூலை 10) முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. இது ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆந்திர பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நிலையில், தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கங்காபுரம் பகுதியில், வெங்கடேசன் என்பவர் நடத்தி வரும் மளிகை கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் நடத்திய சோதனையில், சுமார் 360 கிராம் எடையுள்ள ஹான்ஸ் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளர் மீதும் வழக்குப்பதியப்பட்டது.
செங்கல்பட்டு இன்று (ஜூலை 10) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக, மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசரம் தேவை என்றால், புகைப்படத்தில் கொடுத்துள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு நேர வேலைக்கு செல்லும் பெண்கள், இந்த தொலைபேசி எண்களை கண்டிப்பாக வைத்திருங்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணிடுங்க மக்களே!
நேற்று ஜூலை-10ந் தேதி முதல் செப்டம்பர் மாத இறுதிவரை மாற்றுத்திறனாளி கணக்கெடுப்பு பணி நடைபெறும். இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து, அவர்களது முழுவிபரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்குவதற்கான பணி தொடங்கவுள்ளது. இதில் சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் (CSPs) முன்களப்பணியாளர்கள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அருள் சீலன், தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓரினச் சேர்க்கையாளர் கும்பலால் தாக்கப்பட்டு, அவரிடமிருந்து ஒரு லட்ச ரூபாய், செல்போன், ஏடிஎம் கார்டுகள் பறிக்கப்பட்டன. இதுகுறித்த புகாரின் பேரில், கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் (ஜூலை 15) வரை நடைபெறவுள்ளன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி (ஜூலை 15) அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் மற்றும் குன்னத்தில் நடைபெற உள்ளது என கலெக்டர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.