Tamilnadu

News August 7, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஆக 6) இரவு 10 மணி முதல் இன்று (ஆக 7) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் விபரம் மற்றும் எண்கள் மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவல் அலுவர்களை அழைக்கலாம்.

News August 7, 2025

நெல்லையில் இன்று கைத்தறி தின கண்காட்சி

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள அறிக்கை: பதினோராவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை 7ம் தேதி சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட உள்ளது. நெசவாளர் கூட்டுறவு சங்க கைத்தறி ஜவுளிகள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்படுவதால் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

மீனவர்களுக்கு ஆகஸ்ட் 11 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

image

தொண்டி அருகே திருப்பாலைக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள், கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நேற்று (ஆகஸ்ட்.06) யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளால் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களை ஆகஸ்ட் 11 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

News August 7, 2025

சிறுமியிடம் அத்துமீறிய விஏஓ போக்சோவில் கைது

image

விருத்தாசலம் அடுத்த கோவிலானூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவர் முருகன்குடி வி.ஏ.ஓ.வாக உள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அதே பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அத்துமீறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் இன்று பாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

News August 7, 2025

திருச்சி: தாய்ப்பால் தானம் செய்ய அழைப்பு

image

திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள பால் வங்கிக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 639 பாலூட்டும் தாய்மார்களிடம் இருந்து 192 லிட்டர் தாய்ப்பால் பெறப்பட்டுள்ளது. இது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 634 பிறந்த குழந்தைகளின் நலனுக்கு உதவியுள்ளது. இந்த அளவு குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் இன்னும் அதிகமான தாய்மார்கள் முன்வந்து தானம் செய்ய வேண்டும் என அரசு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News August 7, 2025

காலியாக உள்ள தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

மயிலாடுதுறை மாவட்டம் கொண்டல் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளார். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

புதுச்சேரி பல்கலைக்கழக சமூகக் கல்லூரி ஸ்பாட் அட்மிஷன்

image

பாண்டிச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள பல்கலைக்கழக சமூகக் கல்லூரி 2025–26 கல்வியாண்டிற்கான வரையறுக்கப்பட்ட காலியிடங்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களுக்கான ஸ்பாட் அட்மிஷன்களை 06.08.2025 முதல் 13.08.2025 வரை நடத்துகிறது. கிடைக்கக்கூடிய திட்டங்கள் மற்றும் சேர்க்கை வழிகாட்டுதல்கள் பற்றிய விவரங்கள் pucc.edu.in என்ற கல்லூரி வலை போர்ட்டலில் வழங்கப்பட்டுள்ளன.

News August 7, 2025

விக்கிரமங்கலம்: விபத்தில் சிக்கிய 10 வயது சிறுவன்

image

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 10 வயது சிறுவன் விஷ்னுவர்தன். பள்ளி மாணவரான இவர் நேற்று மாலை சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் பின்னாலிருந்து வந்த ஆட்டோ சிறுவன் சென்ற சைக்கிளின் மீது மோதியதில் சிறுவன் விஷ்ணுவர்தன் பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் பாலச்சந்தர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News August 7, 2025

விவசாயிகள் மானியத்தில் ஊட்டச் சத்து பெறலாம்

image

திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி  ஒன்றியத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் உள்ள விவசாயிகள் சினையுற்ற கறவை பசுக்கள் வைத்திருப்பின் 50% மானியத்தில் ஊட்டச்சத்து பெற்று பயனடையலாம். இதில் அரசின் மானியத்தொகை ரூ.6500 + பயனாளியின் பங்குத் தொகை ரூ.6500  ஆகும். ஆர்வமுள்ளவர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

குமரியில் உழவரைத்தேடி வேளாண்மை முகாம்

image

உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டத்தின் படி ஆக.8 அன்று வடக்கு தாமரைகுளம், குலசேகரம் உட்பட 18 கிராமங்களில் முகாம்கள் நடக்கிறது. இம்முகாமில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து துறைகளின்வட்டார அலுவலர்கள், உழவர்களை வருவாய் கிராமங்களுக்கே சென்று நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்குவார்கள். இம்முகாம்களில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!