India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அமைந்துள்ள ரங்கபூபதி கல்லூரியில் நாளை மறுநாள் (ஆக.9) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 18 – 40 வயதுடைய இருபாலரும் பங்கேற்கலாம். 8ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளது. தேவைப்படுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
தருமபுரி மாவட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள பாரா மெடிக்கல் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் மருத்துவ உதவியாளர், டிரைவர், லேப் டெக்னீஷியன், ஸ்டாப் நர்ஸ் உட்பட 103 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பத்தை <
சாம்பவர்வடகரையை சேர்ந்த ஒற்றைப்போராளி வைத்திலிங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: பன்னெடுங்காலமாய் பயன்பாட்டில் இருந்துவரும் பதிவுத்தபால் முறையை வரும் 1ம் தேதி முதல் ரத்து செய்வதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வாபஸ் பெறக்கோரி தென்காசி அஞ்சல் அலுவலகம் முன்பு 01.09.2025 அன்று 8 மணி முதல் 10 மணி நேரம் பட்டினிப் போராட்டத்தை நான் மேற்கொள்ள இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், கைத்தறி துறை சார்பாக 11ஆவது தேசிய கைத்தறி நாள் விழாவினை முன்னிட்டு, நடைபெற்ற கைத்தறி விற்பனை கண்காட்சியினை, மாவட்ட ஆட்சியினர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இன்று ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சி.எச்.198 தோடா எம்பிராய்டரி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பிரபல யுடியூப் சேனலான ‘பரிதாபங்கள்’மீது கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தனுஷ்கோடி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அந்த சேனலில் இருந்து வெளியான ‘சொசைட்டி பாவங்கள்’வீடியோ வைரலான நிலையில், இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு குடும்ப விவகாரத்தை சமூக விவகாரமாக மாற்றுவதாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்தை COMMENT!
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை, குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “குழந்தையை பள்ளிக்கு அனுப்புவோம்; பள்ளி இல்லாமல் வாழ்க்கை இல்லை” என்ற கோஷத்துடன் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், நாளை (ஆக.08) மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (ஆக.07) தி.மலை உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகமொத்தம் மழை வெளுத்து வாங்க போகிறது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், நாளை (ஆக.08) மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (ஆக.07) திருப்பத்தூர் உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகமொத்தம் மழை வெளுத்து வாங்க போகிறது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க மகளிர் மாநில மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று பூம்புகார் காவல் நிலையத்தில் மாநாட்டுப் பந்தல் வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்ட காவல்துறை ஐஜி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மக்களே, வருவாய்துறையின் கீழ் பெறப்படும் சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்துவிட்டால் தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டாம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் செல்போனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். <
Sorry, no posts matched your criteria.