Tamilnadu

News August 8, 2025

செங்கல்பட்டு: கோயிலுக்கு சொந்தமான இடம் மீட்பு

image

நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் உள்ள ஶ்ரீ நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பில் ஜெய்பீம் நகர் 5வது தெருவில் 1,752 சதுர அடி இடம் உள்ளது. இந்த இடம் சாது சுந்தர்சிங் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் வீடு கட்டப்பட்டிருந்தது. இந்த இடத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்று (ஆகஸ்ட் 7) அறநிலையத்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த இடத்தினை மீட்டனர்.

News August 8, 2025

டெபாசிட் வாங்கினால் சேலை கட்டிக்கிறேன்

image

ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் எங்கள் அமைச்சரை எதிர்த்து நிற்கும் தவெக வேட்பாளர் டெபாசிட் வாங்கினால் நான் சேலை கட்டிக்கிறேன் என்று திமுக இளைஞரணி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தலுக்கான போஸ்டர் யுத்தம் தமிழகத்தில் முதலில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் துவங்கியுள்ளது.

News August 8, 2025

சுதந்திர தின விழா – குமரியில் 95 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

சுதந்திர தின விழாவை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் இடம் மற்றும் நேரத்தை கிராம ஊராட்சி முன்கூட்டியே தெரிவித்து ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை விவரங்களை கூட்டத்தில் படித்துக் காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

News August 8, 2025

என்ன சான்றுகளை பெறலாம்?

image

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News August 8, 2025

கிருஷ்ணகிரி மக்களே சான்றிதழ் தொலைந்துவிட்டதா?

image

கிருஷ்ணகிரி மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க. <<17339955>>தொடர்ச்சி<<>>

News August 8, 2025

கடைமடை பகுதியில் சிறப்பு கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

image

கொள்ளிடம் பகுதியில் பிரதான புதுமண்ணியாறு தெற்கு ராஜன் வாய்க்கால் மற்றும் பொறை வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் கடைமடை பகுதி வரை பாசனத்திற்கு தண்ணீர் சென்று சேர்ந்துள்ளதா என சிறப்பு கண்காணிப்பு பொறியாளர் திருமலை குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மயிலாடுதுறை கீழ் காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் மாரிமுத்து உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.

News August 8, 2025

தடகளப் போட்டிகளில் தென்பரை மாணவர்கள் சாதனை

image

திருத்துறைப்பூண்டி குறு வட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் தென்பரை உயர்நிலைப்பள்ளி பள்ளி குண்டு எறிதல் போட்டியில் அரசு மாணவி வைஷிகா முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றார். மேலும் தொடர் ஓட்டத்தில் சரண், விதுல், தரன், காலியாகுமார் மூன்றாம் இடமும், ஈட்டி எறிதல் போட்டியில் தீபா மூன்றாம் இடமும், தடை தாண்டுதல் போட்டியில் நட்சத்திர ஓவியா மூன்றாம் இடமும் பெற்றனர்.

News August 8, 2025

தேனியில் இலவச தையல் மிஷின் APPLY பண்ணுங்க!

image

தேனியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலரை 04546-254368 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.

News August 8, 2025

சுதந்திர தின விழா – குமரியில் 95 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

சுதந்திர தின விழாவை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் இடம் மற்றும் நேரத்தை கிராம ஊராட்சி முன்கூட்டியே தெரிவித்து ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை விவரங்களை கூட்டத்தில் படித்துக் காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

News August 8, 2025

கடலூர் – புதுவை சாலையில் போக்குவரத்து மாற்றம்

image

கிருமாம்பாக்கம் அருகே உள்ள கன்னியக்கோவிலில் பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர், பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று (ஆக.,8) நடைபெற உள்ளது. அதன் காரணமாக புதுச்சேரி – கடலூர் சாலையில் இலகுரக வாகனம் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!