Tamilnadu

News August 8, 2025

வேலூர் மாவட்டத்தில் இன்றைய இரவு ரோந்து

image

வேலூர் மாவட்டத்தில் இன்றைய (ஆக.8) இரவு ரோந்து பணிக்கான காவலர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் பெயர் மற்றும் தொலைப்பேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த காவலர்கள் எந்தெந்த பகுதிகளில் பணியில் ஈடுபடுவார்கள் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரத்தில் தங்களுக்கு தேவைப்பட்டால் காவலர்களை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News August 8, 2025

சேலம்: புகைப்பிடித்தால் கடும் நடவடிக்கை

image

சேலம் ரயில்வே பகுதிகளில் இயங்கும், ரயில்களில் பயணிக்கும் சிலர் பீடி, சிகரெட், புகைப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து போலீசார் சேலம் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து ரயில்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் பீடி, சிகரெட், குடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்பிஎப் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பயணிகள் இது தொடர்பாக 139 அழைத்து புகார் செய்யலாம்.

News August 8, 2025

தோரணமலை முருகன் கோயிலில் நாளை கிரிவலம்

image

கடையம் அருகே அமைந்துள்ள தேரையர், சித்தர், அகத்தியர் வழிபட்ட தோரணமலை முருகன் கோயில் ஆடி மாத பெளர்ணமி கிரிவலம் நாளை காலை 6 மணி முதல் நடைபெறும். இந்த கிரிவலப்பாதையை வலம் வருவதற்கு சுமார் 1.15 மணி நேரம் ஆகும். அதனைத் தொடர்ந்து காலையும், மதியமும் அண்ணதானம் நடைபெறும்.

News August 8, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட்.08) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக எஸ் .கரிகால் பாரி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி லதா, அரூர் ஜெய் கீர்த்தி, பென்னாகரம் இளவரசி, மற்றும் பாலக்கோடு நடராஜன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 8, 2025

புதுவை: எக்ஸ்போ பொருட்காட்சி திறந்து வைப்பு

image

புதுச்சேரி உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் நடைபெறும் தினமலர் எக்ஸ்போ பொருட்காட்சியினை இன்று (ஆகஸ்ட் 8) வெள்ளிக்கிழமை காலை முதலமைச்சர் என் ரங்கசாமி சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் பொதுப்பணித்துறை அமைச்சர் க லட்சுமிநாராயணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பொருட்காட்சியினை திறந்து வைத்தனர்.

News August 8, 2025

மயிலம் தொகுதியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

image

மயிலம் தொகுதியில் நாளை (ஆக.9) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மயிலம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மனநலம், மூட்டுவலி, நரம்பியல் மருத்துவம், இருதய பரிசோதனை, மகப்பேறு மருத்துவம், பெண்களுக்கான கர்ப்பபை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ஷேர் பண்ணுங்க

News August 8, 2025

100 மகளிருக்கு தலா ரூ.1 லட்சம் மாணியம்

image

சென்னை ராயப்பேட்டையில் இன்று (08.08.2025) 100 மகளிர்களுக்கு புதிய ஆட்டோக்களை வாங்குவதற்காக தலா ரூ.1 லட்சம் மானியத்தொகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இது அனைத்து மகளிர் ஆட்டோ ஓட்டுனர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்வின் போது அரசு அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

News August 8, 2025

நீலகிரியில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Development manager பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News August 8, 2025

திண்டிவனம்: மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை.

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 29 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 6) அதிகாலை மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த வாலிபர், மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். மூதாட்டி சத்தம் போடவே தப்பி ஓடியோள்ளார். போலீஸ் விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் பத்மநாபன் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தகவல்.

News August 8, 2025

திருச்சி-தாம்பரம் ரயிலை 7 நாட்களும் இயக்க கோரிக்கை

image

மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையிலான மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்ற வேண்டும்; திருச்சியில் இருந்து தாம்பரம்வரை 5 நாட்கள் இயக்கப்படும் இன்டர்சிட்டி ரயிலை 7 நாட்களும் இயக்க வேண்டும்; அந்தியோதயா ரயில் சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை எம்.பி சுதா மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

error: Content is protected !!