India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்பி அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தார்.
விழுப்புரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு முதல் கிழக்கு பாண்டி சாலை பகுதியில் மாதாகோவில் பஸ் நிறுத்தம் வரையில், தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது.
புதுவைத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கழகமும் மயூரி சித்திர நாட்டியாலயாவும் இணைந்து நடத்திய பருவ நிலாக் கருத்தரங்கம் அரியாங்குப்பம் முத்தமிழ்க் கலை இல்லத்தில் நடைபெற்றது. இதில் பேராசிரியர் முனைவர் இராச.குழந்தைவேலனார் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் தேசிய விருதாளர் மண்ணாங்கட்டி மொழி வாழ்த்து வழங்கினார். இதில் தமிழ்மாமணி முனைவர் வேல்முருகன் வரவேற்புரை வழங்கினார்.
நெல்லை மாவட்டத்தில் இன்றிரவு (ஆகஸ்ட் 8) முதல் நாளை காலை 6 மணி வரை உட்கோட்ட வாரியாக ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களுடைய கைபேசி எண்ணுடன் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்மந்தபட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். மேலும், நேரடியாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டு உள்ளது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்ட அரங்கில், தருமபுரி மாவட்ட ஓய்வூதியதாரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் தலைமையில் இன்று (08.08.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா. ஓய்வூதிய இயக்கக் கூடுதல் இயக்குநர் அர்ஜுனன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திரசேகர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் 08) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலிருந்து விண்ணப்பங்களை இலவசமாக (www.tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள், தன்விவரக் குறிப்புடன் 2 நிழற்படங்கள், தமிழ்ப்பணி விவரம், குடியிருப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் நகலை, 25.08.2025க்குள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,முகவரிக்கு அனுப்பவும
நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் நகராட்சிகளில் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் வகையிலும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்துவதின் பொருட்டு தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.32.52 கோடி மதிப்பீட்டிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அபாகஸ் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று (08.08.2025) குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (08.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.