India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஆகஸ்ட்-8) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 45 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 40 இருசக்கர வாகனங்கள் ஒரு 4 சக்கர வாகனம் மற்றும் 2 ஆறு சக்கர வாகனங்கள் என மொத்தம் 43 வாகனங்களை 14.8.2025-ம் தேதி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 7904136038, 9498162279, 9787658100 என்ற எண்ணை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி தாலுகா, பொறையாரில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். அப்பொழுது அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில், பொதுமக்களுக்கு அழிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கோப்புகளையும் ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச இளைஞர் மன்றம் 5.0 நிகழ்வில் தமிழ்நாட்டு மாணவர்களின் சார்பில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி நிஷாந்தினிக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.10,000/-க்கான காசோலையை இன்று வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாளை ஆகஸ்ட் 9ஆம் தேதி சனிக்கிழமை தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. விழாவில் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, வழங்க உள்ளார். இதில் ஆட்சியர் துர்கா மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் வழங்கிய ஆசிரியர்களை
மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் புத்தகம் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் (பொ), மாவட்ட கல்வி அலுவலர்கள் செந்தில்குமார் (இடைநிலை), ரமேஷ் (தனியார் பள்ளிகள்) ஆகியோர் உடனிருந்தனர்.
புதுகை மாவட்டத்தில் தட்டாமலைபட்டி, கருவிடைசேரி, குருங்களூர், அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில், தற்பொழுது பருவமழை காரணமாக இந்திய பெருங்கெண்டை, கட்லா, ரோகு, மிர்கால், மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. மீன் வளர்ப்பு கண்மாய், குளங்களில் அரசு விலையில் மீன் குஞ்சுகள் வளர்க்க மீன்வள சார் ஆய்வாளர்களை 8248970355, 9751616866 தொடர்பு கொள்ள கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
வேலூர்–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் கொணவட்டம் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பு கருதி இன்று அகற்றப்பட்டன. வேலூர் டவுன் போலீஸ், தேசிய நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையில், பல தற்காலிக கட்டிடங்கள் மற்றும் வணிகக் கூடங்கள் இடிக்கப்பட்டன. பொதுமக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில், போதைப்பொருள் ஒழிப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், “DRUG FREE TN” என்ற தலைப்பில் மாபெரும் மாரத்தான் போட்டி நாளை (09.08.2025) காலை 5.30 மணிக்கு காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் தொடங்குகிறது. மூன்று பிரிவுகளில் 20 பரிசுகள் வழங்கப்படவுள்ள இந்தப் போட்டியில் ரூ.60,000 பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி நாளை ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி, பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம், பேளுக்குறிச்சியில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி, உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.