India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மக்களே மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்<
கோவை மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <
சிவகங்கை மாவட்ட காவல்துறையில் முதிர்ந்த மற்றும் உதிரா நிலையில் உள்ள காவல் வாகனங்களை பொது ஏலத்தில் ஏலம் விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் (24/08/2025) மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் (21/08/2025) அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை ₹1000/- முன் தொகையினை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என சிவகங்கை எஸ்.பி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து பல்வேறு பகுதிகள் வழியாக புதிய பேருந்து இயக்கம் செயல்முறைப்படுத்தப்பட்டு உள்ளன. திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் இந்த பேருந்து, கோட்டூர், மன்னார்குடி, வடுவூர் உள்ளிட்ட பல ஊர்களின் வழியாக இயக்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள போக்குவரத்து துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் மக்காசோளம் உற்பத்தியை பெருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மக்காசோள சாகுபடிக்கு வீரிய ஒட்டுரக விதைகள், திரவ உயிர் உரங்கள், மண்வள மேம்பாட்டுக்கான இடுபொருட்கள், நானோ யூரியா ஆகியவை அடங்கிய ரூ.6000 மதிப்புள்ள தொகுப்பு வட்டார வேளாண் அலுவலகங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக நாகை வேளாண் இணை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்த கருப்பையா மகள் பாண்டிச்செல்வி (24). திருமங்கலம் அரசு கல்லூரியில் பிஎஸ்சி படித்துள்ளார். நேற்று சிக்கன் ரைஸ் கேட்டதால், அவரது சகோதரர் உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டபின் ஒவ்வாமை ஏற்பட்டு பாண்டிச்செல்வி வாந்தி எடுத்து மயங்கியவரை திருமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 மற்றும் 18 ஆகிய இரண்டு தேதிகளில் குடற்புழு நீக்கம் முகாம் நடைபெற உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் இந்த முகாம் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என கூறியுள்ளார். மேலும் இந்த முகாமில் 5,86,000 குழந்தைகள் மற்றும் 1,98,000 பெண்களும் பயன் அடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின கொண்டாட்டம் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக திருநெல்வேலி வழியாக செங்கோட்டை சென்னைக்கு சிறப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு சிறப்பு ரயில் நாகர்கோயிலில் இருந்து நெல்லை வழியாக வருகிற 17-ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 06012) புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் என தெரிவிக்கபட்டுள்ளது. வள்ளியூருக்கு இரவு 11:25 மணிக்கு வரும்.
காட்பாடி அருகே உள்ள சித்தூரில் இன்று (ஆகஸ்ட் 9) மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த மரத்தான் போட்டியில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் போட்டியாளராக பங்கேற்று ஓடினார். சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேலூர் நேதாஜி மைதானம் வரை போட்டி நடைபெற்றது. சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்றைய(ஆக.9) காய்கறி விலை நிலவரம்: கத்தரிக்காய்: ரூ.50-96, தக்காளி: ரூ.35-50, வெண்டைக்காய்: ரூ.40-50, புடலை: ரூ. 30-50, அவரைக்காய்: ரூ.40-70, பச்சை மிளகாய்: ரூ.40-70, முள்ளங்கி: ரூ.25-30, உருளைக்கிழங்கு: ரூ.40-50, முட்டைக்கோஸ்: ரூ.30, கேரட் ரூ.70, ரூ.50 பீட்ரூட்: ரூ.40-60, பட்டர் பீன்ஸ்: ரூ.140-160, சோயா பீன்ஸ்: ரூ.120-140, காலிபிளவர்: ரூ.30-ரூ.40.
Sorry, no posts matched your criteria.